என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vaishnavi Devi"
- பழங்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்கிற பெயரில் வீற்றிருந்தார்.
- கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
கிருஷ்ண அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின.
தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடம் இருந்த பெண் குழந்தையை கொல்ல மேலே தூக்கினான்.
அக்குழந்தை அவன் கைகளில் இருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்துத் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள்.
மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தெய்வமாக சமயபுரத்தில் மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.
சமயபுரம் மாரியம்மன் பழங்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவி என்கிற பெயரில் வீற்றிருந்தார்.
கோரைப்பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனை வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி அம்மனை சுமந்து சென்றவர்கள் தற்போது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் விக்ரகத்தை இறக்கி வைத்தனர்.
கண்ணனூர் அரண்மனை மேட்டில் ஓலைப்பந்தலில் வைத்துவிட்டுச் சென்றதால் அம்மன் கண்ணனூர் அம்மன் என்றும், கண்ணனூர் மாரியம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
இந்த நிலையில் தென்னாட்டின் மீது படை எடுத்துவந்த விஜயநகர மன்னன் தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டபோது கண்ணில் பட்ட அம்மனை வேண்டினார். போரில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டுவதாக நினைத்துக் கொண்டார்.
அதன்படியே அம்மனுக்கு கோவில் கட்டிய விஜய நகர மன்னர் பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு விழா நடத்தி நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளும் செய்தார்
அதிசய மகாமக தீர்த்தம்
இத்தீர்த்தம் கோவிலின் வடமேற்கே உள்ள வாயுமூலையில் அமையப்பெற்றுள்ளது. கோவில் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் இத்திருக்குளம் அமையப் பெற்றுள்ளது.
புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகாமகத்திற்கு முன்பும், கங்காதேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகனம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது.
வரலாற்று சிறப்புப் பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்குப்பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தம் தன்னகத்தே அதிசய மகாமகதீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின் போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்