search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van - mini lorry hit"

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndraAccident
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பேனுகொண்டா மண்டல் மாவட்டத்தில் உள்ளது சத்தாருபள்ளி கிராமம். இந்த பகுதியில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில், தர்மாவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க வேன் ஒன்றில் 22 பேர் சென்று கொண்டிருந்தனர். சத்தாருபள்ளி என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக பேனுகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்தது.

    இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் தெரிய வரவில்லை. #AndraAccident
    ×