என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vande Sadran Rail"
- வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
- 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வந்தே சாதாரண் ரெயிலின் முதல் ரெயிலுக்கான பெட்டிகளே ஐ.சி.எப். ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
வந்தே சாதாரண் ரெயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரெயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சாதாரண் ரெயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புறம் தற்போதைய ரெயில்களின் பொதுப்பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விசிறிகள், சுவிட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டவை. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் உள்ளது.
இந்த ரெயில் வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது. 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.