search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "variety bonda"

    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகியை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் மேகி போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் -1
    பீன்ஸ் - 5
    குடை மிளகாய் - பாதி
    பச்சை பட்டாணி - கொஞ்சம்
    உருளைக்கிழங்கு - கொஞ்சம்
    எண்ணெய் - தேவையான அளவு
    மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
    கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

    வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

    கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மேகி போண்டா ரெடி.

    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×