search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "variety kuzhambu"

    சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சை மிளகாய் - 15
    குடை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 1
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    புளி - சிறிய உருண்டை
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

    பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

    * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×