search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vathikuchi Dileepan"

    வத்திக்குச்சி திலீபன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் குத்தூசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீனு ராமசாமி தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார். #Kuthoosi #SeenuRamasamy
    காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார். 



    விழாவில் சீனு ராமசாமி பேசும்போது,

    ‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன். ஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார். #Kuthoosi #SeenuRamasamy #Dileepan

    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `காலா' படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். #Kaala #Rajinikanth #Dileepan
    வத்திக்குச்சி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து இருக்கிறார். படம் குறித்து திலீபன் பேசும் போது, 

    வத்திக்குச்சி படத்துக்குபின் குத்தூசி என்ற படத்தில் நடித்தேன். அது இயற்கை விவசாயம் பற்றிய வணிக ரீதியான படம். அது விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ணபோவதாக செய்தி வந்ததும் சென்று சந்தித்தேன். வாய்ப்பு கேட்டேன். ரஞ்சித் இருக்கிறது. ஆனால் உறுதி அளிக்க முடியாதே என்று கூறிவிட்டு உடலை ஏற்ற முடியுமா? என்று கேட்டார். ஏற்ற வேண்டும் என்றார்கள். பின்னர் தேர்வின்போது ஒரு டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். ரஞ்சித் நிறைய உதவி செய்து என்னை பேச வைத்தார். கதாபாத்திரத்துக்கான பயிற்சி நடக்கும்போது தான் நான் ரஜினி சாருக்கு மகனாக நடிப்பது தெரிய வந்தது. இன்ப அதிர்ச்சி ஆனேன்.



    போட்டோஷூட்டிலேயே பார்த்துவிட்டேன். அப்போதே சின்னதாக சிரித்து நம்மை நெருக்கமாக்கினார். முதல் காட்சியில் நடிக்கும்போது தான் மிகவும் பதட்டமானேன். ஆனால் நம் பதட்டத்தை அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். நம்மிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து பதட்டத்தை தணித்து நடிக்க உதவி செய்தார். ரஞ்சித்தும் மிகவும் கூல் டைப். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் மிக பொறுமையாக கேட்டு அவருக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்.

    ரஜினியை பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது?

    அவரை ஒரு நடிகராக மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொழில்பக்தி என்னை வியக்க வைத்தது. 7 மணி படப்பிடிப்புக்கு 6.45 க்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதேபோல் ஒரு வரி வசனமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பார். அவரை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் முதல் படம்தான். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருப்பது யாராலும் முடியாத ஒரு வி‌ஷயம். அந்த தொழிலில் பக்தி இருந்தால் நாம் எந்த தொழிலும் வெற்றி பெறலாம் என்பதை புரிந்துகொண்டேன்.



    தாராவி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக இருக்கும். காலாவின் கதாபாத்திர படைப்பு வேற லெவலில் இருக்கும். ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தும். ரஞ்சித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திபடுத்தும். #Kaala #Rajinikanth #Dileepan

    ×