என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "veetla vishesam"
- ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்’.
- ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மூக்குத்தி அம்மன் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'வீட்ல விசேஷம்'. இப்படத்தை என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கியுள்ளனர். இதில், சத்யராஜ், ஊர்வசி, கே.பி, எஸ்.லலிதா, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை போனிகபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் 'இது மாதிரி ஃபன்னியா தான் சாங் அனோன்ஸ்மெண்ட் வீடியோலாம் பண்ணுனாரு நம்ம நெல்சன்... டேய் நெல்சா' என்று பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி,'நெல்சன் மிகப்பெரிய இயக்குனர். நான் பல ஷோஸ்களில் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களின் தீவிர ரசிகன். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தயவு செய்து இப்படி பேசுவதை நிறுத்துங்கள்' என்று பதிவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.