search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetable prices declined"

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்றவற்றின் விலை குறைந்து உள்ளது. #KoyambeduMarket

    போரூர்:

    டீசல் விலை உயர்வு, வறட்சியால் உற்பத்தி குறைவு, லாரிகள் வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக சென்னையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது.

    தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனாலும், அதிக விலைவாசி காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை குறையத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு மார்க் கெட்டில் இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.8-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.14-க்கும் விற்பனை ஆனது. இஞ்சி ரூ.70-க்கு விற்பனை ஆகிறது.

    மற்ற காய்கறி விலை (ஒரு கிலோவில்) விவரம் வருமாறு:-

    சின்ன வெங்காயம்-ரூ.30-40, கேரட்-ரூ.40, பீன்ஸ்- ரூ.30, வெண்டைக்காய்- ரூ.15, பீட்ரூட்- ரூ.12, உருளைக்கிழங்கு- ரூ.25, மாங்காய்- ரூ.30, பாகற்காய்- ரூ.40, முருங்கைக்காய்-ரூ.20, வெள்ளரி- ரூ.10, முள்ளங்கி- ரூ.8, அவரைக்காய்- ரூ.15, முட்டைகோஸ்- ரூ.6, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி- ரூ.70,கத்திரிக்காய்- ரூ.20. #KoyambeduMarket
    ×