என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vegetable vendors"
- புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
- தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.
தாராபுரம் :
தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-
தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.