என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vehicle seized
நீங்கள் தேடியது "vehicle seized"
சென்னை மாநகரப்பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நின்ற 8000 வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #chennaicorporation
சென்னை:
சென்னை மாநகரப்பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும், பொது சுகாதரத்திற்கும் இடையூறாக உள்ளன.
நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் யாரும் கண்டு கொள்ளாமல் வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.
சாலையின் ஓரங்களிலும், தெருக்களின் முக்கிய பகுதிகளிலும் இது போன்ற வாகனங்கள் யாரும் பயன்படுத்தப்படாமல் கிடப்பதை அகற்ற அதிகாரிகள் களம் இறங்கி பறிமுதல் செய்தனர்.
சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் நகரம் முழுவதும் இருந்து கைப்பற்றப்பட்டன. அந்த வாகனங்களின் விவரங்களை மாநகராட்சியின் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.
வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை பார்த்து எடுத்து செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்களை தேடி யாரும் வரவில்லை. 31 பேர் மட்டுமே வந்து தங்கள் வாகனங்களுக்கான ஆவணங்களை காட்டி திரும்ப பெற்று சென்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-
சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு ஆண்டு கணக்கில் யாராலும் கண்டு கொள்ளாமல் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 31 வாகனங்கள் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 7687 மோட்டார் சைக்கிள்களும், 90 ஆட்டோக்களும், 104 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும்.
இந்த வாகனங்களை தனித்தனியாக டெண்டர் விடுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி டெண்டர் நடைமுறைகளை வகுத்து வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு கமிட்டி ஒரு கோடியே 57 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியதால் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக ஏலம் போனது. ரூ.2 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
ஒரே தவணையில் முழு பணத்தையும் செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தணையின் அடிப்படையில் ஏலம் எடுத்தவருக்கு வாகனங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலையோரம் கேட்பாரற்று நின்ற வாகனங்களை அப்பறப்படுத்தியதில் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வருவாய் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வாகனங்களால் கொசுக்கள் உற்பத்தி ஆகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்து எடுக்கின்ற நடவடிக்கையால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டு உயிர் இழப்பும் உண்டாகிறது. #chennaicorporation

விழுப்புரம் மாவட்டம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள புதுகருவாச்சி பகுதியில் உள்ள ஏரியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுந்தர ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம மனிதர்கள் 3 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர்.
உடனே அந்த மர்ம மனிதர்கள் 3 பேரையும் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவர்கள் புதுகருவாச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), பழைய கருவாச்சி பகுதியை சேர்ந்த சங்கர் (36), கணேசன் (47) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் தேவியாநந்தல் பகுதிக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், சங்கர், கணேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விழுப்பனங்குறிச்சி பகுதியில் திருமானூர் சப்-இன்ஸ் பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் சம்பதன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல்குவாரி செயல்பட்டு வந்த பாதையின் வழியாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது பொக்லைன் இயந்திரம் கொண்டு, 2 லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம், 2 லாரிகள், அதன் டிரைவர்கள் வெற்றியூர் ராஜசேகர், விழுப்பனங்குறிச்சி பிரபாகரன்(26), கார்த்திகேயன்(34) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
×

X