என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vellamandi Natarajan"
- இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிகழ்வு அவரது அணியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.
- ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே அங்கிருந்து விலகி விட்டார்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் கருத்து முரண்பாடுகளால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனி அணிகளாக பிரிந்தனர்.
அதன் பிறகு அ.தி.மு.க.வை மீட்போம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று இரு தரப்பினரும் தங்களுடைய மோதலை சுப்ரீம் கோர்ட்டு வரை கொண்டு சென்ற நிலையில் இறுதியாக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். கட்சியும் அவரது வசம் ஆனது.
இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் உள்பட ஒரு சிலர் கைகோர்த்து பயணித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தார். அங்கு இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட நிகழ்வு அவரது அணியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.
அவரது அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஏற்கனவே அங்கிருந்து விலகி விட்டார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று விரைவில் தாய் கழகமான அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.