search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ven Pongal"

    அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், நெய் - தேவைக்கு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு- தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×