search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vento"

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, அமியோ மற்றும் வென்டோ கார்களை பிளாக் மற்றும் வைட் நிற எடிஷனில் அறிமுகம் செய்துள்ளது. #Volkswagen



    சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது முன்னணி மாடல்களான போலோ, அமியோ, வென்டோ ஆகிய மூன்று கார்களிலும் கருப்பு, வெள்ளை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கருப்பு மற்றும் வெள்ளை நிற எடிஷன் கார்களை பயனர்கள் எவ்வித கூடுதல் விலையும் இன்றி அனைத்து முன்னணி டீலர்களிடமும் வாங்க முடியும்.

    இந்த கருப்பு, வெள்ளை பேக்கேஜில் அனைத்து மாடல்களிலும் மேல் பகுதி கிராஃபிக்ஸ், லெதர் சீட் கவர்கள் பின்புற ஸ்பாயிலர், 16 அங்குல போர்டேகோ அலாய் சக்கரங்கள், மேல்பகுதி கருப்பு வண்ணம் பூசப்பட்டது, கருப்பு நிறத்திலான ஓ.ஆர்.வி.எம்., குரோம் பேட்ஜ் ஆகியன இடம்பெறும். இது தவிர முற்றிலும் கருமையான நிறத்தில் போலோ, வென்டோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

    அனைத்து மாடல்களுமே 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் யூனிட்டை கொண்டவை. 90 பி.ஹெச்.பி. திறன் கொண்ட போலோ ஹேட்ச்பேக் மாடலை போன்று இருக்கும் இது 5 மானுவல் கியர் வசதி கொண்டது. அமியோ மற்றும் வென்டோ செடான் மாடலில் 110 பி.ஹெச்.பி. திறனும் 5 கியரும் கொண்டது. இது தவிர 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ள மாடலும் இதில் கிடைக்கும்.



    போலோ மற்றும் அமியோ மாடல் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரைக் கொண்டது. இது 76 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 95 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. வென்டோ மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 153 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. 

    இதில் 5 கியர் வசதி மட்டுமே உண்டு. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலும் போலோ மற்றும் வென்டோவில் உள்ளது. இது 105 பி.ஹெச்.பி. திறன் 175 என்.எம். டார்க் இழுவிசை திறனை வெளிப்படுத்துகிறது.

    இதில் போலோ மாடல் மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10, போர்டு பிகோ ஆகிய மாடலுக்கு போட்டியாகவும் அமியோ மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் எக்சென்ட், ஃபோர்டு ஆஸ்பயர் மாடலுக்கு போட்டியாக இருக்கிறது. வென்டோ மாடலானது நடுத்தர ரக செடான் காராகும். இது ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ராபிட் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விளங்குகிறது.
    ×