search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veppamaram"

    • மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.
    • பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    வேப்ப மரமும் வேப்பிலையும் பராசக்தியின் மறு அம்சமாக கருதப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எல்லா அம்மன் கோவில்களிலும் வேம்பு நிச்சயம் இருக்கும்.

    வேப்பமரத்தை அம்மனாக கருதி வழிபடும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

    இதனால் தான் வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டிருந்தால் வாசலில் சிறிது வேப்ப இலையை சொருகி வைத்திருப்பார்கள்.

    பெரும்பாலான அம்மன் தலங்களில் வேப்ப மரம் தல விருட்சமாக இல்லாவிட்டாலும் கூட வேப்ப இலையை பக்தர்கள் நிறைய பயன்படுத்துகிறார்கள்.

    பக்திக்கு மட்டுமல்ல. தினசரி வாழ்வுக்கு வேப்ப இலை பெரிதும் பயன்படுகிறது.

    வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து, உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணையில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும்.

    அம்மை கண்டவர்களை சுற்றி வேப்பிலை கொத்துக்களை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும், கிருமியும் அண்டாது.

    தென்னிந்திய சமையலில் வேப்பம் பூக்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பு அன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம் பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்வார்கள்.

    மலர்கள் கடுமையான வயிற்றுவலியை போக்கும் குணம் கொண்டவை.

    பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமப்படுத்த வேப்பம் பூ பயன்படுகிறது.

    ஒரு கைப்பிடி அளவு வேப்பம் பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமப்படும்.

    வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு மற்றும் குழம்பு, மிளகு ரசம் தயார் செய்யும் போது சிறிது வேப்பம்பூவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிற்று உப்பிசம், பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும்.

    கல்லீரல் பாதுகாக்கப்படும்.

    வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக ஏற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகள் நீங்கும்.

    உலர்ந்த வேப்பம் பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.

    ×