என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "VGP"
- இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.
- நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.
சென்னை:
வி.ஜி.பி. குழுமத் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரு மான டாக்டர் வி.ஜி சந்தோசத்தின் 87 -வது பிறந்த நாள் விழாவில் திராவி டர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, டாக்டர் வி.ஜி. சந்தோசம் எழு திய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் நூலினை வெளியிட்டு பேசுகையில், வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் விழாவில் அவரை வாழ்த்துவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை புரிந்து சிறப்பித்தது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நூலிற்கு பொருத்தமானது. வி.ஜி.சந்தோசம் உலகெங்கிலும் திரு வள்ளுவர் சிலையை நிறுவி, தமிழா்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். நூலின் முதல் பிரதியை ரோமா குழும இயக்குநா் ஆர்.வி.எம்.ஏ. ராஜன் பெற்றுக் கொண்டார்.
மூன்று தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி. இலக்கிய விருதினையும், பொற்கிழியையும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கி வாழ்த்தி பேசினார். ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத் தலைவருமான மல்லை சி.ஏ.சத்யா, செய்யூா் சட்ட மன்ற உறுப்பினா் பனையூர் பாபு இணைந்து ஆதரவற்றோருக்கு தையல் இயந்திரத்தை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் அருட்தந்தை ஆரோக்கியராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா, சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆா்.எஸ் சம்பத், பிலிப்பைன்ஸ் கிங்க்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டேவிட் பிள்ளை வாழ்த்திப்பேசி னார்கள். வி.ஜி.சந்தோசம் பிறந்த நாள் கேக் வெட்டி ஏற்புரை ஆற்றுகையில் நாம் அனை வரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் பின்பு தொழில் செய்து தொண்டு செய்ய வேண்டும். தொடர்ந்து வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக, இந்தியா மற்றும் உலக நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலையினை நிறுவி தமிழுக்கு பெருமைச் சேர்த்து வருகிறோம் என்றார்.
இவ்விழாவில் இலங்கை, அமெரிக்கா, தைவான், மலேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரவேற்புரையை வி.ஜி.பி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் வி.ஜி.பி. ரவிதாசும், நன்றியுரையை வி.ஜி.பி. முதன்மை இயக்குநர் வி.ஜி.பி .ராஜா தாசும் வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்