search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vibhuthi"

    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

    இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

    அவற்றுள் சில,

    1. பிரம்மா, விஷ்ணு, சிவன்

    2. சிவன், சக்தி, ஸ்கந்தர்

    3. அறம், பொருள், இன்பம்

    4. குரு, லிங்கம், சங்கமம்

    5. படைத்தல், காத்தல், அழித்தல்.
    பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது
    ஈசனை தலைவனாக ஏற்று நிற்பவர்கள் சைவர்கள். இவர் களின் புனித குறியீடாக திருநீறு விளங்குகிறது. திருநீற்றின் மகிமை சொல்லில் அடங்காதது. கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க, திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிக பாடல்கள் தான் அருள்புரிந்தன.

    பசுவின் சாணத்தில் இருந்து கல்வ விதிமுறையில் தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்படிப் பெறப்படும் கல்ப விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியது என்று புராணங்கள் கூறுகின்றன.

    திருநீற்றுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. விபூதியை ‘ஐஸ்வர்யம்’ என்றும் சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், அதற்கு ‘ரட்சை’ என்ற பெயரும் உண்டு. வினைகளை அழித்து பொடிபடச் செய்வதால் அதனைத் ‘திருநீறு’ என்று சொல்லுகிறோம். ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை ‘விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவய’ என்று ஓதித் தருவதால் விபூதியை ‘பஞ்சாட்சரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். சாதாரணமான விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதிக்கு உடனடி பலன் கிடைக்கும்.

    திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை.. கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பவையாகும்.

    கல்பம் என்பது கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன்பாக தாமரை இலையில் பிடித்து உருண்ைடயாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது. இதனை ‘கல்பத் திருநீறு’ என்பார்கள். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று, கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

    காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது ‘அணுகல்பத் திருநீறு’ எனப்படும்.

    மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது ‘உபகல்பத் திருநீறு’ ஆகும்.

    அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்கு ‘அகல்பத் திருநீறு’ என்று பெயர்.

    இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபார நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன் படுத்தப்படுகிறது. இந்த விபூதியை மந்திரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் எதிர்பார்க்க முடியாது.

    விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. உண்மையான, மிகச் சிறந்த மகானால் தொட்டுக் கொடுக்கப்படும் விபூதி, எந்த ஒரு நறுமணப் பொருளும் கலக்காமலேயே மிகச் சிறப்பான வாசனையைத் தரும் என்கிறார்கள். 
    ×