search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video link"

    2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13.46 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MinistryofRailways #RTI
    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ரெயில்வே துறையின் செலவு குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரெயில்வே அமைச்சகம், பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை காணொளி காட்சி மூலம் ரெயில்வே நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க 13 கோடியே 46 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய ரெயில் பெட்டிகளின் துவக்க விழா, ரெயில் நிலையங்களில் புதிய பகுதி, கழிவறைகள் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.

    காணொளி காட்சிக்கான கேபிள்கள் அமைப்பதிலும், மேடை, எல்.யி.டி. திரை போன்ற பலவற்றுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் சுரேஷ் பிரபு ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MinistryofRailways #RTI
    ×