search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Hazare Trophy 2018"

    விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் வரை மிகவும் பரபரப்பான வீரராக திகழ்ந்தார். அப்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு நேரம் அதிகமாக இருக்கிறது.

    விக்கெட் கீப்பிங் பணியில் ஜாம்பவனாக திகழும் டோனியின் பேட்டிங் சமீபகாலமாக திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் 15 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.



    தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், லீக் ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

    தற்போது நாக்அவுட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரோகித் சர்மா விளையாட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஹரியானா. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற ஹரியானா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் சைனி 40 ரன்களும், பிஷ்னோய் 25 ரன்களும் அடித்தனர். 4-வது வீரராக களம் இறங்கிய ராணா 76 பந்தில் 89 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய ராகுல் டெவாட்டியா 59 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாச ஹரியானா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 குவித்தது.

    தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர் 51 ரன்னும், ஷருண் குமார் 57 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 58 ரன்னும், வருண் சக்ரவர்த்தி 55 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜம்மு-காஷ்மீர் #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பந்து வீச்சு தேர்வு செய்தது. ஆட்டம் 41 ஓவர்களாக நடத்தப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு அணியின் என் ஜெகதீசன், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிநவ் முகுந்த் உடன் முரளி விஜய் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    அபிநவ் முகுந்த் 49 ரன்னிலும், முரளி விஜய் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் ஆட்டமிழக்கும்போது தமிழ்நாடு 20.5 ஒவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் தமிழ்நாடு அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென விழ 39.4 ஓவரில் 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உமர் அலாம் 4 விக்கெட்டும், ரஸிக் சலாம், ரோகித் சர்மா, வாசீம் ரசா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆட்டமிழக்காமல் 70 ரன்னில் 71 ரன்கள் அடிக்க 40.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 பந்து எஞ்சிய நிலையில் ஜம்மு-காஷ்மீர் வெற்றி பெற்று தமிழ்நாடு அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தோல்வியின் மூலம் தமிழ்நாடு 8 போட்டிகள் முடிவில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யரின் சதங்களால் மும்பை 400 ரன்கள் குவித்தது. #VijayHazareTrophy
    பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ரெயில்வேஸ் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ப்ரித்வி ஷா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 61 பந்தில் சதம் அடித்த ப்ரித்வி ஷா 81 பந்தில் 14 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 118 பந்தில் 8 பவுண்டரி, 10 சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் 67 ரன்களும், லாட் 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்தது.
    ×