search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikas Seva Trust"

    • பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்.
    • கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர்.

    திருப்பூர் :

    விகாஸ் சேவா டிரஸ்ட், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி சங்கம், வனம் இந்தியா பவுண்டேசன், கே.பி.என்.காலனி வாக்கர் கிளப் சார்பில் விகாஸ் சேவா டிரஸ்டுக்கு சொந்தமான திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள நிலத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். இனிவரும் காலத்தில் அடர்வனம் அமைப்பது மற்றும் பல மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நடுவது என முடிவு செய்யப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி பேசியதாவது:- விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.90 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது. கூலிபாளையம் பொதுமக்கள், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர் இணைந்து கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர். அதன்பிறகு அப்போதைய ஈரோடு கலெக்டரின் பரிந்துரைப்படியும், ஊர் மக்கள் கூறியதற்கு ஏற்பவும், விகாஸ் சேவா டிரஸ்ட் சார்பில் 14 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி திருப்பூர் மாநகராட்சிக்கு தானமாக கொடுத்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது.

    அதற்கு பதிலாக விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.50 ஏக்கர் நிலத்தை எங்கள் டிரஸ்டுக்கு பதில் நிலமாக மாற்றித்தர கடந்த 2006-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர், பரிந்துரை கடிதம் வழங்கினார். அதன் பின்னர் விகாஸ் சேவா டிரஸ்டின் பெயரில் கடந்த ஆண்டு நில கிரையம் செய்து சிட்டா, பட்டா மாற்றம் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

    ×