search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi suicide"

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதுகுவலி காரணமாக ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குப்பு நாயக்கன்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர் விழுப்புரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் கண்ணன் தனியாக இருந்தார். மற்றவர்கள் வெளியில் சென்று இருந்தனர். இந்த நிலையில் கண்ணன் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியில் சென்றிருந்தவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். கண்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கண்ணனின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல தகவல்கள் கிடைத்தன. கண்ணன் முதுகு வலியால் பல நாட்கள் அவதிபட்டு வந்தார். அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த 3 மாதங்களாக விடுமுறை எடுத்திருந்தார்.

    பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு முதுகுவலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட கண்ணனுக்கு திருமணமாகி பொன்மணி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம்தான் ஆகிறது. பொன்மணி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    திருமணமாகி 1 வருடத்திலேயே போலீஸ்காரர் கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×