search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village public protest"

    தேவதானப்பட்டியில் மயான இட ஒதுக்கீட்டுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி தில்லையாடி வள்ளியம்மை நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு மயான வசதி ஏதும் இல்லை. எனவே இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை ஓரத்தில் பிணங்களை புதைத்து வருகிறார்கள்.

    இது குறித்து அரசுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர். இதற்கிடையில் ஆதி திராவிடர் பழங்குடி இன நல அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரதா ஆகியோர் இந்த பகுதிக்கு வந்தனர்.

    அப்போது தில்லையாடி வள்ளியம்மை நகர் மக்களிடம் அட்டவணம்பட்டி கரடு பகுதியில் மயானம் அமைக்க அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தனர். இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பகுதியில் மயானம் அமைந்தால் சமுதாய ரீதியாக மோதல்கள் உருவாகக்கூடும். எனவே சாலையோர பகுதியில் 51 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை ஒதுக்கினால் அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த அரசு அதிகாரிகள் இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலையை விரிவாக்கம் செய்யும் போது மயானம் பாதிக்கப்படக்கூடும் என்றனர். அதிகாரிகளின் உத்தரவை கிராம மக்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

    உடனே அதிகாரிகள் தாலுகா அலுவலகத்துக்கு வாருங்கள் அங்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்றனர்.

    ×