search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram Girl"

    கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்த உண்டியல் பணம் ரூ.9 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக விழுப்புரம் சிறுமி அனுப்பி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaRain #KeralaFloods
    விழுப்புரம்:

    தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும், பொது சேவை அமைப்புகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.



    அந்த வகையில் விழுப்புரம் கே.கே. சாலை சிவராம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியின் மகள் அனுப்பிரியா(வயது 8) என்கிற சிறுமி, தான் உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை தனது தந்தை உதவியுடன் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளாள்.

    இதுகுறித்து அனுப்பிரியா கூறுகையில், நான் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக தந்தை மற்றும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை 5 உண்டியல்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்தேன். இந்த நிலையில் கேரள மாநிலம் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து செய்திகள் மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். அதனால் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில், தான் சேமித்த ரூ.9 ஆயிரத்தை எனது தந்தை மூலம் கேரள முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பி உள்ளேன் என்றாள். #KeralaRain #KeralaFloods
    ×