search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Ganapathi"

    எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில் காட்சி தரும் விநாயகர் ஆலயங்களை அறிந்து கொள்ளலாம்.
    * மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடி கிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் விருச்சிகப் பிள்ளையார் அருள்புரிகிறார். தேளுக்கு இருப்பது போல் வரி வரியாக கோடுகள் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து ஈசனையும், பிள்ளையாரையும் வணங்கினால் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகே உள்ளது, பழிக்கு அஞ்சிய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகரை வழிபட்டால், அவர்கள் பழிக்கு அஞ்சும்படி செய்வார் என்பதால் இந்தப் பெயர். ஏதாவது தவறு செய்து விட்டவர்கள், தவறுக்கு வருந்துவதுடன் இங்கு வந்து இந்த பிள்ளையாரை வழிபட்டால் மேற்கொண்டு வீண் பழிகள் நேரிடாமல் காப்பார். மேலும் எந்த குற்றங்கள் செய்யாமலும், செய்த தவறால் ஏற்பட்ட குற்ற உணர்வை தவிர்த்தும் மன ஆறுதல் தருவார் என்று சொல்லப் படுகிறது.

    * தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கூத்தூரில் சாஸ்தா விநாயகர் என்ற திருப்பெயருடன் விநாயகர் அருள்புரிகிறார். ஆதியில் இங்கு விநாயகர் கோவில் மட்டும் தான் இருந்ததாம். ஒரு முறை வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை கொள்முதல் செய்து கொண்டு, கூடவே பூரண-புஷ்கலை சமேத அய்யனார் சிலையையும் எடுத்து வந்தனர். அவர்கள் இந்த ஊரில் தங்கி மறுநாள் கிளம்பும் போது, அய்யனார் சிலையை மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டனர். அய்யனார், தான் தங்குவதற்கு இடம் அளிக்கும்படி விநாய கரிடம் வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் சாஸ்தா விநாயகர் என்று பெயர் பெற்றார்.
    ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடவேண்டும். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர்.
    எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும்.

    விநாயகப் பெருமான் நமக்கு அருட்செல்வத்தையும், பொருட்செல்வத்தையும் அள்ளி வழங்குபவர். அவர் சன்னிதியில் குட்டுப் போட்டுக்கொண்டு, காதுகளை இழுத்து, உக்கி போடுவது உடற்பயிற்சியாகவும் அமைகின்றது. தோப்புகரணம் என்று சொல்லப்படும் இந்த செய்கையால், மூளைக்குச் செல்லும் ரத்தம் பம்ப் செய்யப்பட்டு மூளை சுறுசுறுப்படைந்து, சிந்தனை விருத்தியை நமக்கு வழங்குகின்றது.

    கணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்றழைக்கின்றோம். இருபத்தேழு நட்சத்திரங்களையும், மனித கணம், தேவ கணம், ராட்சச கணம் என்று பிரித்து வைத்திருக்கின்றார்கள். எந்தக் கணத்தை எந்தக் கணத்தோடு சேர்த்தால் ஒற்றுமையோடு இருக்கும் என்பதை வலியுறுத்தவே, கல்யாண நேரத்தில் ‘கணப்பொருத்தம்’ பார்க்கின்றனர். கணப்பொருத்தம் தான் குணப்பொருத்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    இந்தக் கணப்பொருத்தம் சரியாகப் பொருந்தாமல், வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள கணபதியை கைகூப்பித் தொழுது பரிகாரங்களைச் செய்தால் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

    பிள்ளையார் சுழி போட்டு நாம் காரியத்தைத் தொடங்குவது வழக்கம். அப்பொழுதுதான் நல்ல விதமாக காரியங்கள் முடிவடையும். விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஷ்வரர்’ என்றும் போற்றப்படுகின்றார். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர். இந்த நோன்பை செட்டிநாடு பகுதிகளில் அதிகமாக பார்க்க முடியும். பொதுவாக இந்த நந்நாளில் எல்லோருமே அருகில் உள்ள ஆலயத்தில் பிள்ளையாரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி பெருகும். அந்தப் பிள்ளையார் நோன்பை முறையாகக் கொண்டாடினால் வாரிசு வரம் கிடைக்கும். புகழ், கீர்த்தி உண்டாகும். செல்வம் நிலைக்கும். செல்வாக்கு மேலோங்கும். இந்தத் திருநாள் கார்த்திகை மாதம் 27-ம் நாள் (13.12.2018) வியாழக்கிழமை வருகின்றது.

    குறிப்பாக திருக்கார்த்திகையில் இருந்து இருபத்தியோராவது நாள், அதாவது தேய்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை தொடர்ந்து இருப்பத்தி ஒருநாட்கள் முன்காலத்தில் விரதம் இருந்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு நூல் திரி, விநாயகர் முன்னிலையில் எடுத்து வைப்பார்கள். இருபத்தியோராவது நாளில், பச்சரிசி மாவும், வெல்லமும் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து, பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் 21 நாட்கள் சேர்ந்த திரியை விளக்கில் இட்டு ஏற்றி, பிள்ளையார் முன்காட்டிவிட்டு அதைச் சாப்பிடுவர்.

    அன்றைய தினம் பிள்ளையார் பாடல் பாடுவதோடு, கருப்பட்டியில் பணியாரம் செய்வதும், சுண்டல், அவல், பொரி, கடலை நைவேத்தியம் படைத்து, நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதும் உகந்தது. விநாயகப்பெருமானை மனமுருகி சதயத்தன்று நாம் வழிபட்டால் இதயம் மகிழும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

    இந்தப் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடும் பொழுது, நடு வீட்டுக் கோலம் போடுவது வழக்கம். விநாயகருக்கு அருகம்புல், மற்றும் மல்லிகை மாலை அணிவிக்கலாம். விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கலக்கங்கள் அகன்று நல்ல திருப்பங்கள் வாழ்வில் உருவாகும்.

    ‘அருகம்புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்
    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன்நீ!
    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றோம்!
    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!’
    என்று கவிஞர் பெருமக்கள் விநாயகரை வர்ணித்துள்ளனர்.

    அத்தகு பெருமை கொண்ட கற்பகப் பிள்ளையார் கை நிறையக் கனதனம் தருபவர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கும் அவரை, ஒருமுறையேனும் நேரில் சென்று வழிபட்டு உன்னதப் பலனைப் பெறுவோம். ஆவணி மாத சதுர்த்தி ஆனைமுகனுக்கு உகந்த திருநாளாகும். அந்த நாளில் மோதகத்தை அவருக்கு நைவேத்தியமாக வழங்கி வழிபட்டால் நாம் சாதகமான பலன்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.
    ×