search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viramuthu"

    • இறந்த பின்தான் தகனம் செய்வார்கள்; தகனம் செய்து இறப்பைத் தந்திருக்கிறது நெருப்பு...
    • உலகம் தோன்றிய நாளிலிருந்து விபத்துகள் புதியனவல்ல...

    சென்னை:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, குவைத் தீவிபத்து தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத்தின் தீ விபத்தில்

    மனிதச் சதைகள்

    கருகிய வாசம்

    உலகக் காற்றில் வீசுகிறது

    இறந்த பின்தான்

    தகனம் செய்வார்கள்;

    தகனம் செய்து

    இறப்பைத் தந்திருக்கிறது

    நெருப்பு

    இதயத்தின்

    மெல்லிய தசைகள்

    மெழுகாய் உருகுகின்றன

    உலகம்

    தோன்றிய நாளிலிருந்து

    விபத்துகள் புதியனவல்ல

    விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்

    அது தொடர்வது

    பாதுகாப்பு அளவீடுகளின்

    குறைபாடுகளைக் காட்டுகிறது

    மனிதத் தவறுகள்

    திருந்தவில்லை என்று

    வருந்திச் சொல்கிறது

    மாண்டவர்களுக்காக

    அழுது முடித்த இடத்தில்

    அழத் தேவையில்லாத சமூகத்தை

    வார்த்தெடுக்க வழி சமைப்போம்

    உலகத் தொழிலாளர்களுக்கு

    என் இந்தியக் கண்ணீர்

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    ×