search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivo V40"

    • விவோ V40e 5G -யில் 50 MP Sony IMX882 பிரதான சென்சார் 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • விவோ V40e 5G தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

    விவோ V40 மற்றும் V40 Pro வெளியிட்ட பிறகு, தற்போது விவோ V40e-ஐ அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராகி வருகிறது. இது செப்டம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    SmartPrix இன் படி, இது V40 சீரிஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பு, விவோ T3 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது, இது V40 இன் அதே வடிவமைப்பைபுடன் ஆனால் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டுள்ளது.

    V40e வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப வழங்குவதை விவோ நோக்கமாகக் கொண்டுள்ளது. விவோ V40e 5G ஆனது 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை 120 Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது முந்தைய மாடல்களில் காணப்பட்ட அதே பிரீமியம் டிஸ்ப்ளே தரத்தை வழங்குகிறது. இது 4,500 Nits பீக் பிரைட்னஸ் மற்றும் 1,200 Nits ஹை பிரைட்னஸ் (HBM), மென்மையான ஸ்க்ரோலிங் ஆகியவற்றை உறுதி செய்யும். விவோ V40e 5ஜி மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இது ஒப்போ ரெனோ 12 போன்ற சாதனங்களில் காணப்படும் திறன் வாய்ந்த போன்றதாக இருக்கும். விவோ V40e 5ஜி-யை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ V40e 5G -யில் 50MP Sony IMX882 பிரதான சென்சார் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். சரியான சார்ஜிங் வேகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், IP65 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இது தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டிருக்கும் என தெரிகிறது.

    விவோ V40e மான்சூன் கிரீன் (Monsoon Green) மற்றும் ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ V40e 5G ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி-யில் கிடைக்கிறது. இது OPPO F27 Pro+ மற்றும் Reno 12 போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    • விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும்.
    • விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது.

    விவோ வி30 சீரிசை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு விவோ அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    இந்த மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் வழங்கப்படுவதால் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்பிளேவுக்கு உதவுகிறது.

    விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதில் இரு 50 எம்பி பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு அல்ட்ராவைட் அடங்கும். இதன் முன்புறம் 50 எம்பி கேமரா உள்ளது. இது உயர்தர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.

    முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ தெளிவான வீடியோக்களை உறுதி செய்கின்றன. விவோ வி40 5500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். கூடுதலாக, 80W வேகமான சார்ஜிங் மூலம், தேவைப்படும்போது விரைவாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

    விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது. இந்த போனின் பின்புறம் மினரில் கிளாஸ் பேக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் சில்வர் மற்றும் நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ப்ளூடூத் v5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி ஆகியவை வழங்கப்படுகின்றன. விவோ வி40 மாடலில் பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

    ×