search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volkswagen Golf GTD"

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கொல்ஃப் GTD மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய சந்தையில் சர்ப்ரைஸ் வரவாக ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD சோதனை செய்யப்படுகிறது. கார்களின் வழக்கமான சோதனை போன்று இல்லாமல், கார் முழுமையாக மறைக்கப்படாமல் சாதாரணமாக சோதனை செய்யப்படுகிறது. 

    கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்டிருக்கும் கொல்ஃப் GTD பெங்களூரு சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. காரின் பின்புறம் டெயில்பைப்-இல் சோதனை செய்யப்படும் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது போஷ் நிறுவனம் தனது டீசல் தொழில்நுட்பங்களை சோதனை செய்ய பயன்படுத்தும் கருவி போன்றே காட்சியளிக்கிறது. 

    போஷ் நிறுவனத்தின் புதிய டீசல் தொழில்நுட்பம் வாகன தயாரிப்பு நிறுவனங்களை நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தை வெகுவாக குறைக்கச் செய்கிறது. இந்த தொழில்நுட்பம் பொருத்தி சோதனை செய்யப்படும் வாகனங்களின் மாசு அளவு தற்சமயம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அளவுகளை விட குறைவு என்பதோடு இவை, 2020-ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் அளவை விட குறைவு ஆகும். 



    ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD அந்நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்ம் சார்வ்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் தற்போதைய கொல்ஃப் MK7 மாடலின் செயல்திறன் மிக்க மாடலாகும். பாகங்கள் மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது கொல்ஃப் GTD பெரிய மாடலாக பார்க்கப்படுகிறது. 

    முன்பக்கம் கருப்பு நிற ஸ்டைலிங் செய்யப்பட்டு இருப்பதோடு ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள், GTD பேட்ஜிங் கொண்ட பிளாக் மெஷ் கிரிள் அதிக காற்றோட்டம் வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ட்வின் 5-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கும் இந்த கார் வரிசையில் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.

    காரின் உள்புறம் அதிக தெளிவாக காட்சியளிக்காத நிலையில், கொல்ஃப் GTD மாடலின் கேபின் டிரைவர் சார்ந்த டேஷ்போர்டு, சென்ட்டர் கன்சோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் ஏர் கான் சிஸ்டம் இயக்க டையல் கன்ட்ரோல் மற்றும் 12.3 இன்ச் கலர் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் GTD மாடலில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 181 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம்: நன்றி Etuners-Motorsport-India and Robesh Vasudevan
    ×