என் மலர்
நீங்கள் தேடியது "vote counting"
- கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
- குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 20 இடங்களில் முன்னிலையில் இருந்தது
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் மாநிலங்கள் வாரியாக பா.ஜனதா கூட்டணி, இந்தியா கூட்டணி, மற்ற கட்சிகளின் முன்னிலை விவரங்கள் வருமாறு:-
தமிழ்நாட்டின் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 37 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க. கூட்டணி 1 இடத்திலும், அ.தி.மு.க. 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 3 இடங்களிலும், இந்தியா கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
தெலுங்கானாவின் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 9 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 5 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களில் முன்னிலையில் இருந்தது. கம்யூனிஸ்டு கூட்டணி 8 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி21 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 7 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 25 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 21இடங்களில் முன்னிலையில் இருந்தது.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 20 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 6 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 36 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 8 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 10 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பிஜூ ஜனதா தளம் 8 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் முன்னிலை யில் இருந்தது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 6 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 1 இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 23 இடங்களில் முன்னிலை யில் இருந்தது. இந்தியா கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
சத்தீஷ்கரில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 10 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 1 இடத்தில் முன்னிலையில் இருந்தது.
அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 10 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 3 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது.
கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 1 இடத்திலும், இந்தியா கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
அரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 6 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இந்தியா கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
இமாச்சலபிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது.
மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி1 இடத்திலும், நா.ம.மு. கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
மேகாலயாவில் உள்ள 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 1 இடத்திலும், மக்களின் குரல் கட்சி 1 இடத்திலும் முன்னணியில் இருந்தன.
மிசோரமில் உள்ள 1 தொகுதியில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி முன்னிலையில் இருந்தது.
நாகாலாந்தில் உள்ள 1 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
சிக்கிமில் உள்ள 1 தொகுதியில் எஸ்.கே.எம். கட்சி முன்னிலையில் இருந்தது.
திரிபுராவில் உள்ள 2 தொகுதிகளி லும் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது.
யூனியன் பிரதேசங்கள்
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 6 இடங்களிலும், ஆம் ஆத்மி 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருந்தது. தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
புதுச்சேரியில் உள்ள 1 தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது.
அந்தமான்-நிக்கோபரில் உள்ள 1 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
சண்டிகரில் உள்ள 1 தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது.
டாமன்-டையூவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க. 1 இடத்திலும் சுயேட்சை 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.
லடாக்கில் உள்ள 1 தொகுதியில் சுயேட்சை முன்னிலையில் இருந்தது.
லட்சத்தீவில் உள்ள 1 தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் இருந்தது.
- சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும்.
- காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியலமைப்பு விதி 370 ஐ கடந்த 2019 இல் மத்திய பாஜக அரசு நீக்கியது. வெளி மாநிலங்களை சேர்த்தவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கக்கூடாது உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் பொதுமக்களிடையேயும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு கடும் எதிரிப்பு கிளம்பியது.
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். எனவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று (ஜூன் 4) நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 1 இடத்தில பாஜவின் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் JKNC தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பிரமுல்லா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மேலும் அனந்தக் ராஜௌரி தொகுதியில் ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதலவரும் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த மெகபூபா மூப்தி முன்னிலையில் உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 5 இல் 2 முதல் 3 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
- சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரிடம் சரத் பவார் பேசியதாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சரத் சந்திரா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்
கூறுகையில், நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் ஆதரவு அளிக்கும்படி நான் பேசவில்லை. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. சிறிதளவே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
- மதியம் 3 மணி நிலவரப்படி 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
- சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மதியம் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும், 19 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணியும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலைவராக பதவியேற்றார். சிவ சேனா கட்சி யாருக்கு சொந்தம் என்ற பனிப்போர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே வெடித்துள்ள நிலையில் இதுதொடர்பான வழங்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து உத்தவ் தாக்கரே களம் கண்டார். சிவா சேனாவின் வில் அம்பு சின்னம் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்ட நிலையில் ஒளிரும் தீப்பந்தம் சின்னத்தில் அவர் களம் கண்டார்.
தேர்தலை சந்திக்காமல் அரசியல் காய் நகர்த்துதல் மூலம் பாஜக பக்கம் சாய்ந்து முதலைவரான ஏக்நாத் ஷிண்டே மீது சிவ சேனா ஆதரவாளர்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா மக்களின் கோபமே சின்னம், பெயர் என அனைத்தும் மாறிய நிலையிலும் சிவ சேனாவை கட்டியெழுப்பிய பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கான வாக்குகளாக மாறி அவர் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியை முன்னிலையில் நிறுத்தியுள்ளது என்று பார்க்கமுடிகிறது.
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றார்.
பெங்களூரு:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் 8,51,881 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா567261 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.
- தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.
போபால்:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.
இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.
இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆகும்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வாரணாசி தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.
சிம்லா:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார். இவர் 5,37,022 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,62,267 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 74,755 ஆகும்.
இதுதொடர்பாக கங்கனா ரணாவத் கூறுகையில், மண்டி தொகுதியில் பெற்ற வெற்றி பிரதமர் மோடியின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
#WATCH | Kangana Ranaut receives the winning certificate as she wins from Himachal Pradesh's Mandi Lok Sabha seat.#LokSabhaElections2024 pic.twitter.com/BLuxyNvO3o
— ANI (@ANI) June 4, 2024
- திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,
திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை.
இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க! என்று தெரிவித்துள்ளார்.
- தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 60க்கும், காங்கிரஸ் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இவர் 6,47,445 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.
- அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.
- மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் உள்ளது என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 230-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:
அரசியல் அமைப்பு நிறுவனங்கள் மீதான மோடி, அமித்ஷாவின் தாக்குதலுக்கு எதிரான போர் இது. அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.
அரசு எந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிரான தேர்தல் இது. பா.ஜ.க. மட்டுமின்றி சி.பி.ஐ, அமலாக்கத் துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.
இது அரசியல் சாசனத்தைக் காப்பதற்கான போராட்டம். அரசியல் சாசனத்தைக் காக்க மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
அரசியல் கட்சிகளை உடைக்கும் வேலையை நாடு முழுவதும் பா.ஜ.க. செய்தது. தெளிவான பார்வையுடன் மக்கள் முன் எங்கள் கொள்கைகளை முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
மோடிக்கு எதிரான போரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட கூட்டணி கட்சிகளை மதிக்கிறோம். அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் வேலையை விவசாயிகள், ஏழை எளிய மக்கள் செய்துள்ளனர். நாடு மோடியை புறக்கணித்து விட்டது. 10 ஆண்டாக ஆட்சி நடத்திய விதம் சரியல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது என தெரிவித்தார்.
#WATCH | Delhi | Addressing a press conference, Congress leader Rahul Gandhi says, "We fought this election not just against BJP but also the institutions, the governance structure of the country, the intelligence agencies CBI &EDI, judiciary because all these institutions were… pic.twitter.com/VbhckSJEvW
— ANI (@ANI) June 4, 2024
- வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
- தற்போது வரை பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 110க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. இந்த பாசத்திற்காக மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என உறுதி அளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
PM Modi tweets, "People have placed their faith in NDA, for a third consecutive time. This is a historical feat in India's history. I bow to the Janata Janardan for this affection and assure them that we will continue the good work done in the last decade to keep fulfilling the… pic.twitter.com/2Gxnlpv8WM
— ANI (@ANI) June 4, 2024