என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vrindavan
நீங்கள் தேடியது "vrindavan"
அக்ஷயா பாத்திரம் திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியருக்கு இதுவரை இலவசமாக 300 கோடி பகல் உணவு அளிக்கப்பட்ட சாதனையை மோடி இன்று விருந்தாவனத்தில் உணவு பரிமாறி கொண்டாடினார். #Modiservesfood #Vrindavanchildren #AkshayaPatra #ThirdBillionthMeal
லக்னோ:
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் 'அக்ஷயா பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது.
பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகள் கல்வியின் மீது கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதற்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பலகோடி மாணவ-மாணவியருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், 300-வது கோடி பயனாளிக்கு இன்று பகல் உணவு வழங்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் இன்று நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக், முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் அங்கு மாணவ-மாணவியர்களுக்கு உணவு பரிமாறினர். இந்நிகழ்ச்சியில் மதுரா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நடிகை ஹேமா மாலினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Modiservesfood #Vrindavanchildren #AkshayaPatra #ThirdBillionthMeal
×

X