என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vvpat verification
நீங்கள் தேடியது "VVPAT verification"
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒப்புகை சீட்டை எண்ணி சரிபார்க்க கோரி மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission #VVPAT
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தோடு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு எந்திரம் சில வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், முறைகேடுகளை தவிர்க்க வழிவகை செய்கிறது.
எனவே இந்த ஒப்புகை சீட்டு எந்திரத்தை குறைந்தது 30 சதவீத அளவுக்காவது பயன்படுத்த வேண்டும். மேலும் அதில் பதிவாகும் ஒப்புகை சீட்டையும் எண்ணி வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளோடு சரிபார்க்க வேண்டும். குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் இந்த ஒப்புகை சீட்டுகளை கைகளால் எண்ண வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #SupremeCourt #ElectionCommission #VVPAT

×

X