search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Can"

    • எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து, சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்துதிருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.

    19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் கேன்கள் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    உரிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் கேன் வாட்டர் சப்ளை செய்து வந்த கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதியுடன் கேன் வாட்டர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட குடிநீர் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.

    லாரி மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர் ஸ்டிரைக் காரணமாக ஓட்டல் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. #WaterCan #DrinkingWater

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 650 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


    திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 350 நிறுவனங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 5 லட்சம் குடிநீர் கேன் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    வேலை நிறுத்தம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ,. 25-க்கு விற்கப்பட்ட தண்ணீர் கேன் தற்போது ரூ. 90 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது.

    தண்ணீர் லாரி உரிமையாளர்ளை தொடர்ந்து, குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தமிழ்நாடு முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நீர் நிரப்பம் நிலையங்களில் இருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை லாரிகளில் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்தது. இருப்பினும் சென்னை புறநகர் பகுதிகளில் இப்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத் தில் பூந்தமல்லி, செந்நீர் குப்பம், செங்குன்றம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் லாரிகள் நிலத்தடி நீரை உறிஞ்சி வட சென்னை, தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகளுக்கு வினியோகித்து வந்தன.

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தற்போது அந்த இடங்களுக்கு தண்ணீர் சப்ளை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    திருவேற்காடு, நூம்பல், அயனம்பாக்கம், வானகரம் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தண்ணீர் இல்லாததால் ஓட்டல்கள், தொழிற் சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

    இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கம், படூர், வாணியஞ்சாவடி, மேலக் கோட்டையூர், ஏகாட்டூர், தாழம்பூர், சிறுசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு, விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. சிறுசேரி தொழிற்பூங்கா பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. சில தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கம்பெனியை மூடி உள்ளதாகவும் தெரிகிறது.

    குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் கடைகளுக்கு தண்ணீர் கேன் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கேன் சப்ளை போதிய அளவு கிடைக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் குடிநீர் கேன் பயன்படுத்தி வருவதால் அவர்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    பல இடங்களில் தண்ணீர் கேன் விலை பலமடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது.

    சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடிநீர் என்பது பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் ஒன்று. வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் மட்டுமின்றி சிறு குறு நிறுவன முதலாளி கள் முதல் சாதாரண தொழி லாளர்கள் வரை பாதிக்கப் பட்டுள்ளனர்.

    2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் என்ற உத்தரவே வேலை நிறுத்தத்துக்கு காரணம். மதுபான ஆலை, குளிர்பான ஆலை, தோல் ஆலைகளுடன் குடிநீர் ஆலை களை ஒப்பிடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    லாரி உரிமையாளர்கள், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் மேலும் நீடிக்கும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை எதிர் கொள்ள குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #WaterCan #DrinkingWater

    நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். #WaterCan #DrinkingWater
    சென்னை:

    நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். 4000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடவில்லை.

    இந்நிலையில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர். 

    இதுபற்றி கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட  குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை எதிர்த்து இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்திய நிறுத்த உள்ளதாக தெரிவித்தார். #WaterCan #DrinkingWater
    ×