search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water crisis"

    • பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.

    எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.

    • அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகள் குளிக்காமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

    நீர்த்தேக்கங்கள் வறண்டுள்ள நிலையில், பம்பிங் ஸ்டேஷன்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியாவின் சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் குழாய்கள் வறண்டு காணப்படுகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் சாலையில் கற்கள் மற்றும் கழிவுகளை கொட்டி கண்டன முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தாமஸ் மபாசா கூறுகையில், 'தண்ணீர் கிடைக்காததால் எனது பிள்ளைகள் குளிக்காமல் பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. சில சமயங்களில் நடு இரவில் தண்ணீர் வந்தால், குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்கலாம் என்று காத்திருப்போம்' என்றார்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.


    இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage

    ×