search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water inflow increse"

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. #VaigaiDam
    கூடலூர்:

    கேரளா மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆறு, வெள்ளிமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது மீண்டும் மழை தொடர்ந்து வருவதால் அணையின் நீர் மட்டம் 67.78 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2,517 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1,560 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் விரைவில் முழு கொள்ளளவை எட்டும்.

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 133.75 அடியாக உள்ளது. அணைக்கு 1,953 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1,947 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடியாக உள்ளது. 43 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.34 அடியாக நீடிக்கிறது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் லோயர் கேம்ப், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதியில் நேற்று மாலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சாரல் மழை பெய்வதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    கூலித் தொழிலாளர்கள் தொடர் மழை காரணமாக வேலையை இழந்துள்ளனர். பெரியாறு 2.4, தேக்கடி 2.6, கூடலூர் 32.3, சண்முகா நதி அணை 27, உத்தமபாளையம் 3.8, வீரபாண்டி 13.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #VaigaiDam
    ×