என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » water sources
நீங்கள் தேடியது "water sources"
சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
சென்னை:
அயனாவரம் குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள், நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தங்களுக்கு அங்கு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். #Encroachments #FloodRelief #HighCourt #TNGovt
×

X