search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wats app account"

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத் இருந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலெக்டர் வினீத் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில் எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    போலி வாட்ஸ் அப் கணக்கு

    இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து கலெக்டர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசில் புகார்

    இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கலெக்டராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- போலி யாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசா ரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனது பெயரில் இருந்தோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    ×