search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weapon procurement"

    ரஷியாவிடம் இருந்து ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்பதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
    வாஷிங்டன்:

    எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் சாதனங்களை ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த சாதனங்களின் மதிப்பு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஆகும்.

    ஆனால், பல்வேறு விவகாரங்களுக்காக, ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என்ற யூகம் எழுந்துள்ளது.

    அதே சமயத்தில், நட்பு நாடாக இருப்பதால், பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா தானாகவே விலக்கு அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

    இந்நிலையில், இதுபற்றி அமெரிக்க உதவி ராணுவ மந்திரி ரண்டல் ஸ்ச்ரிவரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.


    இந்தியா-ரஷியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், எதிர்காலம் குறித்து இந்தியாவுடன் நாங்கள் பேச வேண்டி உள்ளது.

    பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கலாம் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மட்டிஸ் கூறியுள்ளார். ஆனால், எதிர்காலத்தில் செய்யப்படும் கொள்முதல்களுக்காக, இத்தகைய விலக்கு அளிக்கப்படும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது.

    இதுபற்றி மேல்மட்ட அளவில் ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க ராணுவ மந்திரி மட்டிஸ், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் டெல்லியில் இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் செப்டம்பர் 6-ந் தேதி பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்கள்.

    இந்த நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.
    ×