என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » weather meteorological
நீங்கள் தேடியது "Weather Meteorological"
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #TNRain #WeatherCentre
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இன்று (புதன்கிழமை) பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் தென்மேற்கு திசையில் இருந்து, மேற்கு நோக்கி மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு கூறினர்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
ஜி.பஜார், ஆலங்குடி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம், செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், தாம்பரம், கோலப்பாக்கம், புழல், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், விரிஞ்சிபுரம், மேலாலத்தூர், சோழிங்கர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. #TNRain #WeatherCentre

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherMeteorological
சென்னை:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

×

X