search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "web site crime"

    சென்னையில் இணைய தள குற்றத்துக்காக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார். #Chennai #PoliceCommissioner

    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று சர்வதேச கணினி பாதுகாப்பு தினம் கடை பிடிக்கப்பட்டது.

    இதில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்த கொண்டு பேசியதாவது:-

    இன்று கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொது மக்கள் உ‌ஷராக இருக்க வேண்டும். இளைஞர்களை குறி வைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    தொலைபேசியில் தொடர்பு கொண்டோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக் கணக்குகள் தொடர்பாக யாரேனும் தகவல்களை கேட்டால் அதனை பொது மக்கள் கொடுக்கக் கூடாது. இதனை ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தி இருக்கிறது. பொது மக்கள் உஷாராக இருந்தால்தான் இதுபோன்ற குற்றசம்பவங்களை தடுக்க முடியும்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் வங்கி மோசடி, இணைய தள குற்றவாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு பிரிவுகளும் செயல்படுகின்றன. மத்திய குற்றப்பிரிவில் உள்ள அனைத்து பிரிவுகளுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    சைபர் கிரைம் போலீசார் இணைய தள குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக 10,254 மனுக்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 399 வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Chennai #PoliceCommissioner

    ×