search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding"

    • மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு மணமகள் கிராமத்துக்கு வருகை தந்தனர்.
    • காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

    ராஜஸ்தானில் திருமணத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான சண்டையில் மணமகன் வீட்டை சேர்ந்த நபர் பெண் வீட்டை சேர்ந்த 7 பேர் மீது வண்டியை ஏற்றியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா[Dausa] வில் மணமகள் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதால் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அங்கு வருகை தந்துள்ளனர்.

    மாப்பிளை வீட்டாரோடு தனது காரில் அவர்களின் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அங்கு தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார்.

    இதனால் அவருக்கும் பெண் வீட்டு ஆட்கள் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபர் கோபத்தில் தனது காரை இயங்கி முன்னாள் நின்ற அந்த 7 பேர் மீதும் ஏற்றியுள்ளார். இதனால் அந்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில்  வெளியாகி உள்ளது.

    ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது காரை ஏற்றிய நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர்
    • வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அங்குவந்து திருமணம் செய்து கொண்டனர்.

    உலகில் கலாச்சாரங்கள் மட்டும் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் திருமணம் என்பது அனைத்து நாட்டு மக்களிடையேயும் பொதுவாக காணப்படும் வழக்கம். மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது.

    இந்த முறைப் படி திருமண சடங்குகளில் மணமகன் - மணமகள், மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார், விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் என அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள்.

    கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இந்த வினோத முறை தொடங்கியுள்ளது. ஜமைக்காவில் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அசாதாரணமானவற்றை விரும்புபவர்களுக்காக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

     

    அதன்படி முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகளுக்கு இதுபோல அங்கு வைத்து நிர்வாண திருமணம் நடந்துள்ளது.

    வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அவர்கள் அங்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பதாக ரிசார்ட் தரப்பு தெரிவித்தது. இந்த முறையை பின்பற்றி உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிர்வாண திருமணங்கள் இன்றளவும் அங்கங்கே அரங்கேறி வருகிறது.

    • கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன.
    • இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

    புதுடெல்லி:

    வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை கார்த்திகை மாத திருமண சீசன் ஆகும். எனவே அடுத்த வாரம் முதல் திருமண சீசன் களைகட்ட உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் இந்தியா முழுவதும் 35 லட்சம் திரும ணங்கள் நடைபெற்றன. அதன் மூலம் ரூ.4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

    ஆனால் இந்த ஆண்டு சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருமண சீசனில் வர்த்தகம் 41 சத வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த ஆண்டு திருமண சீசனில் 18 முகூர்த்த நாட்கள் உள்ளன. எனவே வர்த்தகம் அதிகரிக்க இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    ஒட்டுமொத்த திருமண சீசன் வர்த்தகத்தில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

    குறைந்தபட்சமாக தலா ரூ.3 லட்சம் செலவில் 10 லட்சம் திருமணங்களும், அதிகபட்சமாக ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவில் 50 ஆயிரம் திருமணங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருமணத்தின்போது பொருட்கள் மற்றும் சேவைகளை பெற அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தங்கத்துக்கு 15 சதவீதம், ஆடைகளுக்கு 10 சதவீதம், வீட்டு உபயோக சாதனங்களுக்கு 5 சதவீதம், உலர் பழம், இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம், மளிகை மற்றும் காய்கறிகளுக்கு 5 சதவீதம், பரிசு பொருட்களுக்கு 4 சதவீதம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

    சேவையை பொருத்தவரையில், திருமண மண்டபத்துக்கு 5 சதவீதம், கேட்டரிங் சர்வீசுக்கு 10 சதவீதம், அலங்காரம், போக்குவரத்துக்கு 3 சதவீதம், போட்டோ, வீடியோவுக்கு 2 சதவீதம் செலவிட வேண்டியிருக்கும்.

    இந்த தகவலை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

    • மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார்.
    • திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக கேரளா விளங்குகிறது என்றே கூறலாம். இங்கு அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டி தருவதில் மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    அதுவும் ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தையும் விரும்புவார்கள். அந்த வகையில் ஹவுஸ் போட் சுற்றுலா கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள ஏரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஹவுஸ் போட்களில் சில நேரங்களில் கேளிக்கை விருந்துகள் நடத்துவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஆலப்புழை கைநகரி ஏரியில் நடந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் புகைப்படங்களுடன் அது தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதாவது டெல்லி போலீசில் தடயவியல் நிபுணராக பணி செய்து வருபவர் ஹரிதா (வயது 25). இவர் ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் பங்கேற்று வருகிறார். இவருக்கும், சாலக்குடியை சேர்ந்த ஹரிநாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றார்.

    பின்னர் பிரத்யேகமாக திருமணம் நடத்த மண்டபம் மற்றும் கலைநிகழ்ச்சி, விருந்துகளை தடபுடலாக நடத்த ஒரு சிறிய மண்டபம் போன்று ஏரியில் செட் அமைக்கப்பட்டிருந்தது. திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவில் நடந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

    • பலருக்கும் முன்னுதாரணமாக எளிமையாக திருமணத்தை முடித்து காட்டியிருக்கிறது அந்த ஜோடி.
    • ஆஷிஷ் வசிஷ்ட் ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர்.

    வாழ்வில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருமணத்தை தடல்புடலாக பலரும் புகழ்ந்து பேசும்படி நடத்தி முடிப்பதே பலரின் கனவு. அம்பானி குடும்ப திருமணம்போல கோடிகளை கொட்டி செலவு செய்ய முடியாவிட்டாலும், தங்கள் தகுதிக்கு ஏற்ப கடனை வாங்கியாவது அதிகப்படியாக செலவு செய்து ஊரார் போற்றும்படி திருமணம் நடத்துவது பெரும்பாலானவர்களின் வழக்கம்.

    ஆனால் திருமணத்துக்கு அதிக செலவு செய்து ஆடம்பரத்தை வெளிக்காட்டுவதைவிட, அளவாக செலவு செய்து வளமாக வாழ்ந்து காட்டுவதே சிறந்த குடும்பம் என்பதை உணர்த்தும் விதமாக 500 ரூபாயில் திருமணம் நடத்திக்காட்டியிருக்கிறது ஒரு ஐ.ஏ.எஸ். ஜோடி. அவர்கள் விரும்பினால் பல லட்சங்களை செலவு செய்து, ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுத்து பலரும் மெச்சும்படியாக திருமணத்தை நடத்த முடியும். ஆனாலும் பலருக்கும் முன்னுதாரணமாக எளிமையாக திருமணத்தை முடித்து காட்டியிருக்கிறது அந்த ஜோடி.

    இந்தியாவில் உயர்நிலை பதவிகளான ஐ.ஏ.எஸ். பதவியில் இருக்கும் சலோனி சிதானா மற்றும் ஆஷிஷ் வசிஷ்ட் தங்கள் திருமணத்தை எளிமையாக செய்ய விரும்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். மாலை மாற்றிக்கொண்டதுடன் திருமண சடங்குகள் முடிந்தன.

    ஆஷிஷ் வசிஷ்ட் ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர். சலோனி சிதானா பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர். மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் அவர்கள் அங்கேயே திருமணம் முடித்தனர். மேலும் திருமணத்திற்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்த அவர்கள் மூன்றாம் நாளில் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016-ல் நடந்தது. பிரபலமாக நடந்த அம்பானி குடும்பத்தின் திருமணத்தையொட்டி, இந்த ஜோடியின் எளிமையான திருமணம் பற்றிய தகவல் சமூக வலைதளத்தில் பரவி மீண்டும் வலம் வருகிறது.

    • இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
    • 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.

    இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
    • இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
    • திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

    அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

    இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நேற்று திருமணம் இனிதே நடந்தது.
    • திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மார்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    நான்கு மாதங்களாக நட்சத்திரங்கள் பிரபலங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, நேற்று திருமணம் இனிதே நடந்தது. 

    இவர்களின் திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் ஏராளமானோர் வருகை தந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

    இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாரூக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். டபிள்யூடபிள்யூஎப் குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் செனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    அம்பானியின் சொந்த ஊரான குஜராத்தின் ஜமாநகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில், மெட்டாவின் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ், பிளாக்ராக் இணை நிறுவனர் லேரி ஃபிங்க், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ப்ஹாய் உட்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆனந்த் அம்பானியின் இந்த திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    • பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
    • நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம்.

    ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்துடன் ஹல்திராம்சின் ஆலு பூஜியா, சேவ் உள்ளிட்ட பொருட்கள் நிறைந்த பரிசு தொகுப்பை அம்பானி வழங்கியுள்ளார்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை மும்பையில் இன்று கோலாகலமாக திருமணம் செய்கிறார்.

    திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர். 

    திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    பெட்டியின் உள்ளே ஹல்திராமிஸின் நம்கீனின் நான்கு பாக்கெட்டுகள், இனிப்புப் பெட்டி மற்றும் ஒரு வெள்ளி நாணயம், நம்கீன் பாக்கெட்டுகளில் ஹல்திராமின் ஆலு பூஜியா சேவ் மற்றும் லைட் சிவ்டா ஆகியவை அடங்கும்.

    • ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.
    • ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை.

    இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் வருகிற ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே திருமணத்துக்கு முந்தைய சம்பிரதாயங்களும் நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையிலேயே நடப்பதால் மும்பையில் ஓட்டல் முன்பதிவுகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

     

    ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி, மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் மையமான பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள பெரிய ஓட்டல்களில் முன்பதிவு தீவிரமாக உள்ளது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களின் ஆக்கிரமிப்பு மற்றும் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.

    ஜூலை 14 அன்று ஒரு ஓட்டல் ஒரு இரவுக்கு ரூ. 91,350-க்கு அறைகளை வழங்குவதாக சுற்றுலா மற்றும் ஓட்டல் இணையதளங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக வாடகை ரூ. 13,000 ஆக இருந்தது. ஆனால் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.

    விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பிகேசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஓட்டல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

    பிகேசி-ல் அறை கட்டணங்கள் ஒரு இரவுக்கு ரூ. 10,250 மற்றும் ஜூலை 9 அன்று ரூ.16,750 மற்றும் ஜூலை 16 அன்று ரூ. 13,750 ஆக இருப்பதாக பயண முன்பதிவு இணையதளங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

    ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை. அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளும் இந்த தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டல் இணையதளங்கள் காட்டுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

    தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

    இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×