என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "WELFARE SCHEMES"
- பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது.
- ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
திருவாரூர்:-
பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சலவை தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது,
ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் 20 வயதிற்கு மேம்பட்ட ஆண் பெண் என இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டத்திற்கு கீழ்கண்டுள்ளவாறு ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.
மனுதாரர் விண்ணப்பம், சாதிச்சான்று நகல், வருமானசான்று நகல், குடும்ப அட்டை நகல், 7 வருடங்களாக விலையில்லா சலவை பெட்டி அரசிடமிருந்து பெறவில்லை மற்றும் இவர் சலவை தொழில் செய்து வருகிறார் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று அசல், புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் இணைக்கப்படல் வேண்டும்.
எனவே, மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,
மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2,ஆம் தளத்தில் அறை எண் 84 உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- இந்த விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெங்கட்ராமன் முன்னிைல வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் தென்காசி டாக்டர் சங்கரகுமார் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு இலவச சேலைகளும், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். விழாவில் மாணவர் காங்கிரஸ் மாநில அமைப்பாளர் சீமான் ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற இளைஞரணி தலைவர் மனோஜ் குமார், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி பிரிவு தலைவர் ராமர், மாவட்ட மாவட்ட துணைத்தலைவர் பாண்டி செல்வம், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் பூங்கொடி, ராஜபாளையம் வட்டார துணைத்தலைவர் சின்னத்தம்பி , பகவதி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர்களின் யூனியன் வட்டார தலைவி கற்பக கனி, துணைத்தலைவி ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.
- மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியது போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன் என்று கவுன்சிலர் நாகஜோதி சித்தன் கூறினார்.
- மாநகராட்சி செய்ய தவறினால் போராட்டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.
மதுரை
மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் நிறைவேற் றப்பட்ட திட்டங்கள் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் நாக–ஜோதி சித்தன் கூறியதா–வது:-
மதுரை மாநகராட்சியின் 20-வது வார்டு கவுன்சில–ராக மட்டுமின்றி, கல்விக் குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். இந்த வார்டில் 4,200 குடும்பங்களும், 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின் றனர். இந்த வார்டில், மொத் தம் 110 தெருக்கள் உள்ளன.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் வார்டாக இது உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு இருப்ப–தால் தொழில் சார்ந்த மக்கள் மற்றும் தொழிற்சா–லைகள் முழுவதுமாக எங்க–ளது வார்டுக்கு வருவ–தில்லை. மதுரையின் முதன்மை வார்டாக ஆக்கு–வதே எனது லட்சியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறேன்.
பாலமுருகன் நகர் 1-வது, 2-வது தெருவில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2 தரைப்பாலம், எனது சொந்த செலவில் கட்டி மக்களுக்கு கொடுத்துள் ளேன். எனது வார்டு மக்கள் அவசர தேவைக்கு அடிப் படை பிரச்சினைகளை சரி செய்ய ரூ.2 லட்சம் வைப் புத்தொகை வழங்கி உள் ளேன். தேர்தலின் போது வழங்கிய 30 வாக்குறுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
ராமமூர்த்தி நகரில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள் ளது. மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் செல்லூர் ராஜூ, நிதியிலிருந்து சொக் கநாதபுரம் தெருவில் கலை–யரங்கம், ராமமூர்த்தி நகர் நியாய விலைக் கடை தற்போது கட்டுவதற்கு பணி–கள் நடந்து வருகிறது.
மக்கள் அனைவரும் பயன்பெற, அனைத்து அரசு அதிகாரிகள் தொலை–பேசி எண்களும் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். எளிதில் மக் களை தொடர்பு கொள்ள எனது நம்பரை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட் டுள்ளது. இன்னும் சி.சி.டி.வி. கேமரா, மினரல் வாட்டர், புறக்காவல் நிலை–யம், தார் சாலை, உடற்பயிற்சி கூடம், அம்மா உணவகம் போன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுக–ளாக விளாங்குடி பகுதியில் மட்டுமல்லாமல் மற்ற பகு–திகளும் இலவச அமரர் ஊர்தியால் 700-க்கும் மேற் பட்ட இறந்த உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. இதன் முலம் நூற்றுக்க–ணக்கான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒவ் வொரு தெருவிற்கும் சென்று மக்கள் பிரச்சினை–களை ஒவ்வொரு நாளும் கேட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளித்து தீர்வு கண்டு வருகிறோம். முன்னாள் முதல்-அமைச் சர் புரட்சித்தலைவி ஜெயல–லிதா மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன்.
அ.தி.மு.க. வார்டு என்ப–தால் மேயர் மற்றும் ஆணை–யாளர்கள் அதிக கவனம் செலுத்த தயங்குகின்றனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, தனி ஆளாக மக்க–ளுக்கு அடிப்படை பிரச்சி–னைகளை பெற்றுத்தர போராடி உள்ளேன். இது–வரை நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சுமார் 14 கூட் டத்தில் கலந்து கொண்டு, 14 கூட்டத்திலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்வு காண பேசி தீர்வு கண்டுள்ளேன். அன்றும் இன்றும் மக்களுக்கு தேவையை மாநகராட்சி செய்ய தவறினால் போராட் டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.
இவ்வாறு அவர் கூறி–னார்.
- சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் சதவீதம்லம் கடன் வழங்கும் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8சதவீதம், பெண்க ளுக்கு 6சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படு கிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிக பட்ச கடனாக ரூ.10லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலைஃமுதுகலைதொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில் பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20லட்சம் வரையில் 3 சதவீதம், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம் மாணவிகளுக்கு 5சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரை கல்விகடனு தவிவழங்கப்படு கிறது.
சிறுபான்மையினர் பெண்களுக்கு விலை யில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் திட்டம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் பெண்களுக்கான விலையில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
கபர்ஸ்தான் மற்றும் அடக்க இடங்கள் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனர மைத்தல் நிதி உதவி அளிக்கும் திட்டம் கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்தவர்கள் புனிதப்பயணமாக எருசலேம் செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
கிராமப்புறங்களில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவி களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.
கூட்ட த்தில் பொது மக்கள் முதியோர் உதவி த்தொகை, விதவை உதவி த்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை ப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை வழங்கி னார்கள். அவற்றை பரி சீலனை செய்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் ரூ.18,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்கள், தாட்கோ சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ. 3,500 மதிப்பில் சலவைப்பெட்டி, ஒரு விவசாயிக்கு நிலம் வாங்கு வதற்காக, மானி யத்துடன் ரூ. 4,05,000 கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பில் 4 மாற்றுத்தி றனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட தாட்கோ மேலா ளர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.
- மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதுவை அரசின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று பேசியதாவது:-
புதுவையில் அரசு நல திட்டங்களுக்கு மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும்.
டி.ஆர்.பட்டினத்தில் மீன் இறங்கு மையம், ஆற்று முகத்துவாரம் சுகாதாரமாக இருக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காரைக்காலில் தற்போதுள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். காரைக்கால் மேடு, பட்டினச்சேரியில் மீன் இறங்கு துறையை கையாளவும், மீன்பிடி கைவினை பொருட்கள் பாதுகாப்பாக நங்கூர மிடவும் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.
புதுவை, காரைக்கால் சுனாமி குடியிருப்புகளில் சாலை, வடிகால், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். காரைக்கால் வடக்கு கடற்கரை, மாகி கட ற்கரையில் உள்ள பாதுகாப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும். மாகி துறைமுகத்தில் விடு பட்ட பணிகளை நிறைவு செய்ய 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் காரைக்கால் மீனவர்களின் படகுகள், வலைகளை இலங்கை அரசு நாட்டுடமை ஆக்குகிறது. மத்திய அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு கடன் அட்டை மூலம் வட்டியின்றி கடன் வழங்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக வடக்கு தெற்காக பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
- ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி:
போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல அமைச்சர் சந்திரபிரியங்கா தனது சட்டப்பேரவை அலுவலகத்தில், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி செலவீனங்கள் , ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.
சிவில் பணிகள், கல்விக் கடன், வீடுகட்டும் கடனுதவி மற்றும் இதர திட்ட செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.பி. ரமேஷ், தட்சிணாமூர்த்தி என்ற பாஸ்கர், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையின் அரசுச் செயலர் கேசவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
- வையாபுரி மணிகண்டன் கண்டனம்
- மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது?
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுவை அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்வி களை கேட்டது கிடையாது.
மீன்களை பிடிக்கிறாயா? விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள் ளார்களா? மீன்பிடிக்கி றார்களா? வேறு வேலை செய்கிறார்களா?
எந்த மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களின் புகைப்படம் எங்கே? என கொடும் குற்றவாளிகள் போலவும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக, போலியான தகவல்களை அளித்து மாபெரும் துரோகம் இழைப்பவர்கள் போலவும் மீனவ சமுதாய மக்களை என்ஆர்.காங்கிரஸ் அரசு கொச்சைப்படுத்துகிறது.
படிவத்தின் இறுதி உறுதி மொழியிலும், தவறான தகவல்களை தெரிவித்தால், தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு தொடர சம்மத மும் கோரப்பட்டுள்ளது.
இதற்குமேல் மீனவ சமுதாய மக்களை புதுவையை ஆளும் அரசும், முதல்-அமைச்சரும் இழிவுபடுத்த முடியாது. மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது? என்பதை இந்த படிவம் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்ப டுத்துகிறதா?
முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு, தெற்கு உட்பட புதுவை மாநிலத்தில் வாழும் 18 மீனவ கிராம பஞ்சாயத்தில் வாழும் பெரும்பாலான பாமர, படிப்பறிவற்ற மீனவ சமுதாய மக்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசு மறை முகமாக வஞ்சிக்க நினைக்கி றதா? மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதை அ.தி.மு.க. சார்பில் வன்மை யாக கண்டிக்கிறோம். மீன்வளத்துறை வழங்கி வரும் இந்த படிவத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ராம்கோ குரூப் அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் அறக்கட்டளைகளில் ஒன்றான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.
பரம பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் தயானந்த சரஸ்வதி ஆலோசனைப்படி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிர மணியராஜாவும், அவரது துணைவியார் சுதர்சனமும் இணைந்து 2004-ம் ஆண்டு பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் ராஜபாளையத்தில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ-மாணவிகள் விடுதியை தொடங்கினர்.
கல்வி அறிவு என்பதே இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மலைவாழ் குழந்தைகளை ராஜபாளையம் அழைத்து வந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்தனர். இந்த விடுதியில் தற்போது 51 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 105 பேர் கல்வி கற்று வருகிறார்கள்.
இதன் 19-ம் ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்த விடுதியில் நர்சிங் படித்த ராம் நகர் பகுதி மாணவி மகாலட்சுமியை நான் மலை கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது சந்தித்து பேசினேன். இந்த சமூகத்தில் ஒரு மாணவி படித்து வேலை பார்த்து வருவது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் சிலர் வனத்துறையில் வேலை பார்த்து வருவதாக அறிந்தேன். இந்த சமூகம் முன்னேற ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா செய்து வரும் பணிகளை பாராட்டுகிறேன் என்றார்.
ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலாராஜ் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்டின் டிரஸ்டி யும், விஷ்ணு சங்கர் மில் மேனேஜிங் டிரஸ்ட்டியுமான சாரதா தீபா தலைமை தாங்கினார்.
ராம்நகர், அத்திகோவில், ஜெயந்த்நகர், வள்ளியம்மாள் நகர், செண்பகத்தோப்பு, அய்யனார்கோவில், தலை யணை, மொக்கத்தான்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் 200 குடும்பங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் புதிய ஆடைகள் வழங்கினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் வாழ்த்தி பேசி னார். விடுதி மேலாளர் முருகேசன் வரவேற்றார். பி.ஏ.சி ராமசாமி ராஜா கல்வி தர்மஸ்தாபன கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ராம்கோ டிரஸ்ட்களின் செயலாளரும், விஷ்ணு சங்கர் மில் துணைத் தலைவருமான குருசாமி, ஸ்ரீமதி லிங்கம்மாள் சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் முதன்மை பொது மேலாளர் ராஜ்குமார், பி.ஏ.சி.ஆர்.கல்வி தர்ம ஸ்தாபனத்தின் சி.இ.ஓ. வெங்கட்ராஜ், ஜி.எம்.கூடலிங்கம், பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோகிணி, பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பி.ஏ.சி.ஆர். சேதுராமம்பாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, டி.ஏ.கே.எம்.ஆர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா, ராம்கோ பாலவித்தியா பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா, மற்றும் பலர் பங்கேற்றனர். ஆண்கள் விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, வங்கி கடனும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
- பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
திருச்சியில் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன் அந்தந்த மாவட்ட சுய உதவிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டது.
அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் திருச்சி நிகழ்ச்சியை அகன்ற திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய பின்னர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தலைமை கொறடா கோவி செழியன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கி சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தஞ்சை மாவட்டத்தில் 491 சுய உதவி குழுக்களுக்கு ரூ.21.99 கோடி கடன் உதவி, 280 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.120.96 கோடி மதிப்பிலான வங்கி கடனும் ஆக கூடுதல் ரூ.142.95 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் 771 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திர சேகரன், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது.
- 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.
விழாவில் 987 ஊரக பகுதியில் உள்ள மகளிர் உதவி குழுக்களுக்கு ரூ.7452.39 லட்சம் வங்கிக் கடன் உதவியும், 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.648.10 லட்சம் கடன்களையும், 295 ஊரக பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.442.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதலும், 40 மகளிர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் தொடக்க நிதியும், 221 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1492.71 லட்சம் வங்கி கடன் உதவியும், 10 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதி வழங்குதலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்