search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were submerged"

    • நேற்று இரவு 8 மணி முதல் பிற்பகல் வரை அடை மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று பிற்பகல் வரை அடை மழை பெய்து வருகிறது.

    இந்த அடைமழை மழையால் பொதுப்பணித்துறை கணக்கின்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விளை நிலங்களிலும் வாய்க்கால்க ளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சித்தேரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாய்க்கால்கள் உடைந்து அதில் வரும் தண்ணீர் நிலத்தில் புகுஅந்துள்ளது. இதனால் நெற்பயிர்கள் மூழ்கி வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

    இந்த தொடர் மழையின் காரணமாக கடலூர்-பாண்டி ரோட்டில் தண்ணீர் தேங்கி ஓடை போல காட்சிய ளிக்கிறது.

    வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் புதியதாக போடப்பட்ட சாலை சேதம டைந்து பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடலூர்-புதுச்சேரி ரோட்டிற்கு அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் புகாதவாறு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர் முறையாக ரோட்டில் இருந்து தண்ணீர் வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால் ரோட்டில் முழுக்க இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி காணப்படு கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    இந்த தொடர் மழையால் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளது. பாகூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு குறுக்கே விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போதுமான வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்தா ததால் விளைநிலத்தில் தண்ணீர் தேங்கி காணப்படு கிறது. இதனால் பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்தும் இருக்கிறது.

    இந்த மழையின் காரண மாகவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பாகூருக்கு ஏரிக்கு பங்காரு வாய்க்கால் வழியாக வேகமாக வந்து கொண்டு உள்ளது. தற்பொழுது பாகூர் ஏரி 2.80 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    பாகூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் அளவில் புதிய நடவு நெற்பயிரில் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயி கள் கவலை அடைந்துள்ள னர். கன்னியாகோவில் பகுதியில் அமைந்துள்ள மணப்பட்டு தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடந்த சில தினங்க ளாக வழிந்த நிலையில் தற்பொழுது ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

    ×