search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WhatsApp Pay"

    இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கும் பணிகளில் மும்முரம் காட்டுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #WhatsApp



    ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவையை விரைவில் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவன வருவாய் விளக்கக் கூட்டத்தில் பேசிய மார்க், சர்வதேச சந்தைக்கான பேமண்ட்ஸ் சேவையை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் பே சேவையை இயக்கும் போது தகவல்களை உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பீட்டா சோதனை சுமார் பத்து லட்சம் பயனர்களிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

    "இந்திய வாட்ஸ்அப் செயலியில் சோதனை நடைபெறுகிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவையை துவங்குவோம் என நம்புகிறோம், எனினும் இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றி தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சேவை தொடர்பான பணிகள் நடைபெறுகிறது" என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். 



    "இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஷாப்பிங் மற்றும் மார்கெட் பிளேஸ் அம்சங்கள் இருக்கின்றன. இவற்றை கொண்டு பல லட்சம் பேர் வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறானவர்கள் புதிய வழிகளில் பணம் செலுத்த புதிய சேவை வழி வகுக்கும். 

    குறுந்தகவல் சேவையை பயன்படுத்தும் போது அனைவருக்கும் தனியுரிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அனைவரும் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை மேற்கொள்ள தனிமையை விரும்புகின்றனர் என அவர் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் சேவையை தினமும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
    ×