search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "which looks like the sea"

    • பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மழைப்பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.90 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து பவானி சாகர் அணைக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இதன் காரணமாக இன்று காலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.95 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,524 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 400 கன அடி உள்பட 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் உஷார் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

    ×