என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Why Women's Day"
- மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்.
சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போது தொடங்கியது
மகளிர் தினம்
1975-ம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. ஆனாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1911-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டியதை வலியுறுத்தும் நாளாகவும் அமைகிறது. சம ஊதியம், கல்வி பெறுவது, தலைமை வாய்ப்பில் தற்போதும் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு, அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.
பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்த, முன்னேறிய பெண்களைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும் நாளாக இருக்கிறது.
மகளிர் தினத்தின் கருப்பொருள்:
2024-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள், 'பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்,' என்பதாகும். இதன் மூலம், பொருளாதாரத்தை வலுவாக்குவதை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு கருப்பொருள் 'திறமையை ஊக்குவிப்பது.
சர்வதேச மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம். ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடையே ஒற்றுமையையும், தோழமையையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை அடையும் பொருட்டு அவர்களது கூட்டு வலிமையை கொண்டாடுவதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
மிக முக்கியமாக பெண்களின் சாதனைகளை கொண்டாடவும், உலகில் நிலவிவரும் சமத்துவமின்மைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தை அமைக்கும் பொருட்டு வாதிடுவதற்கான ஒரு தளமாக அமைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்