search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகாவை அடுத்த அம்பிளிகொளா பகுதியை சேர்ந்தவர் மனு. இவரது மனைவி கவுரம்மா (வயது 28). கவுரம்மா சிகாரிப்புராவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனு அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மனு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவியிடம் உணவு பரிமாறும்படி கேட்டுள்ளார்.

    ஆனால் கவுரம்மா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே ஒரு கட்டத்தில் நீங்களே உணவு பரிமாறி சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கவுரம்மா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் கடும் கோபமடைந்த மனு, மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் கவுரம்மா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனு, மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் எனக்கு உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் கவுரம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கவுரம்மாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மனுவை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மனுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணமகன் மீது பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    • மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் 1961 ஆண்டு மே 1 முதல் அமலில் உள்ளது. அதன்படி இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

    வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் வரதட்சணை கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

    இந்நிலையில், தான் கேட்காமலேயே தனக்கு வரதட்சணை கொடுத்ததாக தனது மனைவியின் குடும்பத்தினர் மீது மணமகனே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையில், மணமகன் மீது ஏற்கனவே பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக அக்டோபர் 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.

    மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 காசோலையாகவும், ரூ.46,500-யை அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர்

    இதனால் தன் மீது சுமத்துப்பட்டுள்ள புகாரை திசை திருப்பவே மணமகன் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் வரவே, இரு தரப்பினரும் புகார் தொடர்பான ஆதாரத்தை சமர்ப்பித்த பிறகே இது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்று என நீதிமன்றம் தெரிவித்தது.

    • மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்
    • கணவர் வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஐதராபாத்தில் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வரும் தனது மனைவி திவ்ய ஜோதி, தினமும் லஞ்சம் வாங்குவதாக கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார் என்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டு கட்டாக வாங்கிய லஞ்சப் பணத்தினை தனது மனைவி வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறி கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியன் திரைப்பட பாணியில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவரே காட்டி கொடுத்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
    • 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'

    திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

     

    இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.

    மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ  எழுதிக்கொடுத்துள்ளார்.

    • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
    • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் வரதட்சணை தராததால் மீனா என்ற இப்பெண்ணை, அவரது கணவர் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்ற நபருக்கு 2 ஆண்டுகள் முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.

    வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா அப்பா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர் மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது வீட்டிற்கு மனைவியை அவர் அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து சுந்தர் கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார்.

    இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறா
    • சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று, மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது

    மனைவி தன்னை தனி அறையில் தூங்க சொன்னதால் மன அழுத்தத்திலிருந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு லக்னோ குடும்ப நீதிமன்றத்தை நாடினார். அங்கு தீர்வு கிடைக்காத நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    அவரது மனுவில், திருமணமான 4- 5 மாதங்களுக்கு தன்னுடன் இணக்கமாக இருந்த மனைவி அதன்பின் தன்னை மிரட்டி மன ரீதியாக துன்புறுத்துகிறார், உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை தனியறையில் தூங்க வற்புறுத்துகிறார் என்று கணவர் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் தனது அறைக்குள் நுழைந்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அதற்கு எனது குடும்பம் தான் காரணம் என்று எழுதி வைப்பேன் என்றும் மனைவி மிரட்டுவதாவும் அவர் அந்த மனுவில் தெரிவித்தார்.

     

    இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று என்றும், மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது என்றும் இதனால் கணவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

    • ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.
    • ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல்- அனிதா தம்பதியினரிடையே நேற்று வாக்குவாதம் எழுந்துள்ளது.

    நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, தனது கணவனின் கொடூரமான செயல் குறித்து பேசினார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
    • யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை.

    ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது மனைவியின் கால்களை கட்டி ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தனது சகோதரியை பார்க்க வேண்டும் இழுத்து செல்லப்பட்ட பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார்.

    இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை கட்டி இழுத்து சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
    • குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.

    குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

    தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.  

    • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
    • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    • 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
    • திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

    32 வயது என நினைத்து திருமணம் செய்த தனது மனைவியின் வயது 40 என தெரிய வந்ததும் 34 வயதான அவரது கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது அவரது மனைவியின் வயது 32 என பெண் வீட்டார் கூறியுள்ளனர். அந்த பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர்.

    இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

    அப்போது இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 - 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியானது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×