என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » wimbledon grand slam
நீங்கள் தேடியது "Wimbledon Grand slam"
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றியை ருசித்துள்ளார். #Wimbledon2018 #Serena
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 3-வது காலிறுதி ஆட்டத்தில் 25-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத கமிலா ஜியார்ஜியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஜியார்ஜி 6-3 என எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் 2-வது செட்டை 6-3 என வீழ்த்தி அசத்தினார். பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டிலும் அசத்தினார். அந்த செட்டை 6-4 எனக் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்.
கடைசி காலிறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீராங்கனையான ஜோர்ஜஸ் 20-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஜூலியா 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின் 7-5 எனக் கைப்பற்றினார். பின்னர் 3-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். ஜூலியா ஜோர்ஜெஸ் அரையிறுதில் செரீனா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.

போதைமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் தடைபெற்று மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள டேன் ஈவன்ஸ்க்கு வைல்டுகார்டு மறுக்கப்பட்டுள்ளது. #Wimbledon
இங்கிலாந்து டென்னிஸ் வீரர் டேன் ஈவன்ஸ். 28 வயதாகும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற தொடரின்போது கோகைன் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.
தற்போது தடைக்காலம் முடிந்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். 21 போட்டிகளில் விளையாடி 16-ல் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தரவரிசையில் 340-வது இடத்தில் இருக்கும் டேன் ஈவன்ஸ், வைல்டுகார்டு சிறப்புரிமை கேட்டிருந்தார். ஆனால், விம்பிள்டன் ஒருங்கிணைப்பார்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இங்கிலாந்தை சேர்ந்த மற்ற வீரர்கள் யாரும் வைல்டுகார்டு கேட்காத நிலையிலும், இவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதிச் சுற்றில் இருந்தே டேன் ஈவன்ஸ் விளையாடி வரவேண்டிய நிலையில் உள்ளார்.

ஓய்வு காலம் முன்பைவிட நெருங்கியுள்ளது என்று 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். #RogerFederer
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறது. 36 வயதாகும் இவர் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற, ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றிய பெடரர், இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனை வென்றார். பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத அவர், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களம் இறங்குகிறார்.
36 வயதாகும் பெடரரிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், டென்னிசை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு பற்றி யோசிக்கவில்லை என்பார்.
ஆனால், தற்போது தன்னுடைய ஓய்வு முன்பைவிட நெருங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெடரர் கூறுகையில் ‘‘என்னுடைய ஓய்வு முன்பை விட நெருங்கியுள்ளது. ஆனால், அது எப்போது முடிவிற்கு வரும் என்று எனக்கே தெரியாது.
அது மிகவும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். குறிப்பாக என்னுடைய குழந்தைகளையும், அவர்களை பள்ளிகளுக்கு செல்வதும் முக்கியமானது. அது எப்படி இருக்கப் போகிறது என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்’’ என்றார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு பயிற்சி ஆட்டமாக கருதப்படும் பர்மிங்காம் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். #sharapova
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையும், 2004-ம் ஆண்டின் விம்பிள்டன் சாம்பியனும் ஆன மரியா ஷரபோவா பர்மிங்காம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாமில் காலிறுதி வரை முன்னேறிய ஷரபோவா விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக 2016-ல் கலந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. ‘‘எனக்கு பர்மிங்காமில் சிறந்த நினைவுகள் உள்ளன. இந்த வருடம் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.

×

X