search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "withdraws"

    ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான பரிந்துரையில் இருந்து தான் விலகுவதாக ஹீத்தர் நாவேர்ட் அறிவித்தார். #UNAmbassador #HeatherNauert
    வாஷிங்டன்:

    ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கடந்த ஆண்டு தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து அந்த பதவிக்கு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் பெண் பத்திரிகையாளருமான ஹீத்தர் நாவேர்ட்டை ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரை செய்தார்.

    ஆனால் ஹீத்தர் நாவேர்ட்டுக்கு தூதரக பணியில் போதிய அனுபவம் இல்லை என கூறி ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான பரிந்துரையில் இருந்து தான் விலகுவதாக ஹீத்தர் நாவேர்ட் அறிவித்தார். தனது குடும்ப நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஐ.நா.வின் அமெரிக்க தூதருக்கான புதிய வேட்பாளரை டிரம்ப் விரைவில் பரிந்துரை செய்வார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq
    ஜம்மு:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
     
    இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டார்.

    முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.



    இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq 
    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. #Pulwamaattack #Arunjaitley #MFNationstatus
    புதுடெல்லி:

    இந்தியாவின் எதிரிநாடாக இருந்தாலும் அண்டைநாடாக இருக்கும் பாகிஸ்தானுக்கு 'மிகவும் முக்கியத்துவமான நாடு’ என்ற சிறப்பு தகுதியை இந்திய அரசு கடந்த 1996-ம் ஆண்டு அளித்தது.

    இதன் மூலம் பாகிஸ்தான் - இந்தியா இடையே தங்குதடையற்ற வகையில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.



    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, ‘மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது’ தெரிவித்தார்.

    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் நேரடி தொடர்பு உள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இந்த தாக்குதலை ஏவி விட்டவர்கள் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். இதுபோன்ற வன்முறைகளை தூண்டிவிடும் பாகிஸ்தானை சர்வதேச சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய வெளியுறவுத்துறை
    உறுதியாக எடுக்கும் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லியிடம் இருந்து ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயலிடம் முன்னர் அளிக்கப்பட்டிருந்த நிதித்துறை இலாகாவுக்கு பிரதமரின் ஆலோசனைக்கு பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் அருண் ஜெட்லி இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். #Pulwamaattack  #Arunjaitley #MFNationstatus #PakistanMFNationstatus

    அசாம் மாநிலத்தில் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் பதவி விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்எல்ஏ இன்று ராஜினாமாவை திரும்ப பெற்றார். #AssamMLA #BJPMLAResign
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர், எம்எல்ஏவாக தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஆனால் சபாநாயரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை.



    தனது தொகுதியில் உள்ள அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சமீபத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதில் தன்னை புறக்கணித்ததாக அவர் கூறியிருந்தார். தற்போது முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

    இதுபற்றி தேராஷ் கோவல்லா கூறுகையில், ‘நேற்று இரவு முதல்வர் என்னை அழைத்து பேசினார். அப்போது, பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இந்த பணி நியமனத்தில் உள்ள சிக்கல்கள் இருந்ததாக முதல்வர் விளக்கினார். எனது கவலைகளை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். இது தொடர்பாக அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்’ என்றார். #AssamMLA #BJPMLAResign
    ×