என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » woman arreated
நீங்கள் தேடியது "woman arreated"
டெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நடந்தபோது, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். #Republicday #womanarrested
புதுடெல்லி:
சுல்தானா, மும்பையில் தனது உறவினர்களை சந்திக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நிஜாமாபாத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் வழிதவறி டெல்லிக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நிஜாமாபாத்தில் இருந்து புறப்படும்போது, யாரிடமும் சொல்லாமல் வந்ததாகவும், இதனால் அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுல்தானாவிடம் இருந்து சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படாததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Republicday #womanarrested
டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இன்று குடியரசு தின விழாவிற்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு பெண், உயர் பாதுகாப்பு நிறைந்த அந்த பகுதிக்குள் நுழைந்து, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் அந்தப் பெண் ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் இடத்தை சேர்ந்த சுல்தானா என கண்டறியப்பட்டுள்ளது. அமர் ஜவான் ஜோதிக்குள் நுழைய முயன்ற அவரை, டெல்லி காவல்துறையினர் கைது செய்து பாராளுமன்ற வீதி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நிஜாமாபாத்தில் இருந்து புறப்படும்போது, யாரிடமும் சொல்லாமல் வந்ததாகவும், இதனால் அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுல்தானாவிடம் இருந்து சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படாததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Republicday #womanarrested
×

X