search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman custody"

    புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஊழியரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணன் கடந்த  ஜுலை மாதம் 27-ந்தேதி மாத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றும் திருச்சியை சேர்ந்த டைப் பிஸ்ட் சவுந்தர்யா கைது செய்யப்பட்டு  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது போலீசார்  விசாரணையில் தெரியவந்தது.

    இந்தநிலையில் சவுந்தர்யாவின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாத்தூர் போலீசார், கீரனூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக சவுந்தர்யா நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கீரனூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.  சவுந்தர்யா தரப்பில் ஆஜரான வக்கீல்கள்,  ஏற்கனவே வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில், போலீஸ்காவல் விசாரணை தேவையில்லை  என வாதிட்டனர். சவுந்தர்யா என்னை அடித்து துன்புறுத்தாமல் இருந்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறினார். 

    போலீசார் தரப்பில், பெண் என்பதால் சரிவர விசாரணை நடத்தவில்லை. உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டோம்.  கொலைக்கான முக்கிய ஆதாரங்களை சேகரிக்க விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என்றனர்.இரு தரப்பு மனு  மீது விசாரணை நடத்திய நீதிபதி, போலீசார் கூறிய காரணங்கள் ஏற்று கொள்வதாக இல்லை என்று கூறி, போலீசார் தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து சவுந்தர்யாவை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
    ×