என் மலர்
நீங்கள் தேடியது "woman injured"
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக இருப்பவர் பூங்குழலி. இவர் தனது காரை பெண் டிரைவர் ராணியை ஓட்ட வைத்து சென்று கொண்டிருந்தார். பழனி-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தியேட்டர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எந்தவித சிக்னலும் காட்டாமல் டிரைவர் ராணி காரை திருப்பினார்.
அப்போது வயலூரை சேர்ந்த சாந்தப்பன் தனது மனைவி ஜோதிமணி (41) மகள்கள் மனோன்மணி, வர்ஷினி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் வந்த கார் சாந்தப்பன் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜோதிமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்ததை அறிந்தவுடன் டிரைவர் ராணி காரை விட்டு இறங்கி தியேட்டருக்குள் சென்று விட்டார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆய்வாளர் வந்த காரை சிறை பிடித்தனர். விபத்தில் காயம் அடைந்த ஜோதிமணியை ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பயிற்சி பள்ளியை சேர்ந்த ராணியை போக்குவரத்து ஆய்வாளர் டிரைவராக அமர்த்தி உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல விபத்தை ஏற்படுத்தினார். போக்குவரத்து விதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய போக்குவரத்து ஆய்வாளரே அனுபவம் இல்லாத டிரைவரை பணியில் அமர்த்தியதால்தான் இந்த விபத்து நடந்தது என பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை வண்ணாரப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி அஞ்சலை (வயது 50). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி-அம்மன்பேட்டை புற வழி சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அஞ்சலை காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஞ்சலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை அருகே ஏம்பலத்தை அடுத்த மணக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது31). காங்கிரஸ் பிரமுகரான இவர் சமீபத்தில் நடந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
சபரிக்கு திருமணமாகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் பிறந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளன. ஹேமாவதி கைக்குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சபரி தனது தாய் ராஜேஸ்வரி, தம்பி சுரேந்தர் மற்றும் மகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் சபரி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி மீது வெடிகுண்டு சிதறல்கள் விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே ராஜேஸ்வரி மற்றும் சபரி அவரது தம்பி சுரேந்தர் வீட்டில் இருந்து வெளியே அலறியடித்து ஓடிவந்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசியல் விரோதம் காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசி இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த 17 பெண்கள் விவசாய வேலைக்கு சென்றனர். சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேடகத்தில் வேலை பார்க்க அவர்கள் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் (வயது30) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். ஜமீன் கொல்லம்கொண்டான் விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் சென்ற 17 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பணிகளை துரிதப்படுத்தினார்.
இதில் பஞ்சனை, சின்னப் பொன்னு, லட்சுமி, பிச்சையம்மாள், மஞ்சு உள்பட சிலர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
நெல்லை மாவட்டம் சிவகிரியில் வெள்ளையம்மாள் என்பவரது வீடு உள்ளது. இன்று காலை அவர் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் திடீரென்று கியாஸ் கசிந்து தீ பிடித்தது. அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இதில் வெள்ளையம்மாள் வீடும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சிவகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமுருகேசன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம்:
கொளத்தூர், பாலாஜி நகரில் நேற்று இரவு ஒருவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்ததும் சமையல் செய்ய வந்த 17 வயது சிறுவன் உள்பட சிலர் மது அருந்தினர். அப்போது சிறுவனிடம், கேட்டரிங் உரிமையாளர் ஒரு பொருளை தனது காரில் வைக்கும்படி கூறி உள்ளார்.
ஆனால் அந்த சிறுவன் காரை ஓட்டிப் பார்த்ததாக தெரிகிறது. மாதவரம், தணிகாசலம் நகர், குமரன் பஸ் நிலையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலை யோரத்தில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது மோதியது.
பின்னர் அவ்வழியே மொபட்டில் வந்த மேலும் 2 பெண்கள் மீது மோதி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் சுவரை உடைத்து தொங்கியபடி நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவனிடம் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #accident
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்த மூக்காண்டி மனைவி அன்னலட்சுமி (வயது 65). இவர் வீடுகளில் வேலை செய்து வருபவர். நேற்று வேலைக்கு செல்வதற்காக திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
தனியார் அறக்கட்டளை மருத்துவமனை அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அன்னலட்சுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த காளஹஸ்தி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையில் திருப்பதி, ரேணிகுண்டா, ஏர்பேடு காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை முதல் ஷிப்டுக்கு 30 பெண் தொழிலாளர்கள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் காளஹஸ்தி-சென்னை நெடுஞ்சாலையில் வரதய்ய பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வரதய்ய பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள உக்காடு தென்பரையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவருடைய மனைவி புஷ்பவள்ளி (வயது 55).
இவர் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு கார்வயல் கோட்டகம் என்ற இடத்தில் உள்ள வயலில் புல் அறுக்க சென்றார். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கொல்ல வயல் வரப்புகளில் வெங்காய வெடி என்ற ஒரு வகை வெடியை வைப்பது வழக்கம்.
புஷ்பவள்ளி வயலில் புல் அறுத்து கொண்டிருந்த போது வரப்பில் பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி, புஷ்பவள்ளி கையில் இருந்த அரிவாளில் சிக்கியது. அப்போது அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் புஷ்பவள்ளியின் இடது கை மணிக்கட்டு வரை சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புஷ்பவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி வெடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மாதவி(35). தொழிலாளி.
இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டின் பின்புறம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் உள்ள புதருக்குள் இருந்த வந்த சிறுத்தை மாதவி மீது பாய்ந்து அவரது தலைப் பகுதியை கடித்து தாக்கியது.
இதனை பார்த்த மாதவியின் மகன் நித்தீஷ்(4) சத்தம் போட்டான். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் சிறுத்தையை விரட்டினார்கள். பின்னர் மாதவியை மீட்டு டேன்டீ எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.தலையில் பலத்த காயம் என்பதால் அங்கும் சிகிச்சையளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
டேன்டீ நிர்வாகத்திற் குட்பட்ட சிங்கோனா பகுதியில் ஓரே மாதத்தில் 3-வது முறையாக சிறுத்தை நடைபெற்றுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். .டேன்டீ நிர்வாகமும் வனத்துறையினரும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.