search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewellery robbery"

    கந்தர்வக்கோட்டை மற்றும் கரூரில் பெண்களிடம் மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை வங்கார ஓடை தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன். பருத்தி வியாபாரி. இவரது மனைவி ஹேமா (வயது 38). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நேற்று இரவு ராமசந்திரன் குடுத்துடன் வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே நுழைந்தனர். 

    பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஹேமா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பிடித்து இழுத்தனர். அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே மர்ம நபர்கள் அரிவாள் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்தனர். ஆனால் ஹேமாவதி மர்ம நபர்களுடன் நகைளை கொடுக்காமல் போராடினார். 

    இந்த சத்தம் கேட்டு ராமசந்திரன் எழுந்தார். அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதனால் பயந்து போன மர்ம நபர்கள் கையில் கிடைத்த பாதி நகையுடன் தப்பியோடினார். போராடியதால் ஹேமாவிடம் பாதி நகை சிக்கியது. 

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கரூர் பஞ்சமேடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 31). இவர்கள் 2 பேரும் இன்று காலை வெண்ணேய்மலை அருகே நடை பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சங்கீதா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    ×